செக்ஸ் டார்ச்சர் கொடுத்த காதல் மனைவியை கழுத்தை நெறித்துக் கொன்று எரித்த கணவர்
தூத்துக்குடி: மனைவி செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததால் அவரை கழுத்தை நெறித்துக் கொன்று தீ வைத்து எரித்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா புதூர் அருகே உள்ள ஜமீன்செங்கல்படையைச் சேர்ந்த வீரபெருமாள் மகள் லதா (19). அதே பகுதியில் உள்ள சென்னமரெட்டிபட்டியைச் சேர்ந்த வேலு மகன் செந்தில்முருகன் (23). லதாவும், செந்திலும் காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு தனிக்குடித்தனம் செய்தனர். இந்நிலையில் கடந்த 8ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற லதா வீடு திரும்பிவில்லை. இதற்கிடையே சென்னமரெட்டிபட்டியில் உள்ள வயலில் பெண் ஒருவரின் சடலம் எரிந்த நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த புதூர் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த சடலம் லதாவுடையது என்றும், அவரை செந்தில் தான் கொன்றார் என்றும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் செந்திலை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
செந்தில் போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது,
லதாவின் உறவினர் வீடு எங்கள் ஊரில் உள்ளது. அவர் அடிக்கடி உறவினர் வீட்டுக்கு வருவார். அப்போது நாங்கள் இருவரும் சந்தித்துக் கொண்டோம். போனிலும் பேசி வந்தோம். எங்களுக்குள் காதல் அரும்பியது. ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராக காதலித்தோம். இந்த காதல் விவகாரம் இருவரது வீட்டுக்கும் தெரியவந்தது. எதிர்ப்புகள் இருந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல், காதல் திருமணம் செய்து கொண்டு தனிக்குடித்தனமாக வசித்து வந்தோம்.
திருமணத்துக்கு முன்பு போனில் பேசிக் கொள்ளும் போது லதா என்னிடம் செக்ஸ் விஷயங்கள் குறித்தும் பேசுவாள். செல்போனில் ஆபாச படம் வைத்து இருக்கிறீர்களா? சி.டி.யில் ஆபாச படம் பார்த்தது உண்டா? என்றெல்லாம் கேட்டு இருக்கிறாள். அப்போது அதை நான் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை. என்னிடம் ஒளிவு மறைவின்றி பழகுகிறாள் என்றுதான் நினைத்துக் கொண்டேன்.
திருமணத்துக்கு பின்பு எனது செல்போனை எடுத்து அதில் இருந்த ஆபாச காட்சிகளை பார்த்தாள். நான் தினமும் அருப்புக் கோட்டைக்கு பெயிண்டிங் வேலைக்கு சென்றுவிட்டு இரவில் தாமதமாகத்தான் வருவேன். ஆபாச படங்களில் வருவதைப் போன்று அதிக நெருக்கமாக இருக்க வேண்டும் என்றும், இரவில் நீண்ட நேரம் உறவு கொள்ள வேண்டும் என்றும் வற்புறுத்தினாள்.
அவளது செக்ஸ் ஈடுபாடு நாளடைவில் சரியாகிவிடும் என்று நினைத்தேன். ஆனால் பின்னாளில் அதுவே எங்களுக்குள் பிரச்சினை ஏற்பட காரணமானது. செல்போனில் புதிய புதிய ஆபாச படங்களை பதிவு செய்து வரச் சொன்னாள். இதனால் எங்களுக்குள் நாள்தோறும் இரவில் தகராறு ஏற்பட்டது.
இந்தநிலையில் உள்ளூர் உள்ள ஒரு வாலிபரிடம் அவள் போனில் பேச ஆரம்பித்தாள். சாதாரணமாகத்தான் பேசுகிறாள் என்று முதலில் நினைத்தேன். பின்னர் அவளது போக்கில் மாறுதல் ஏற்பட்டது. எங்களுக்குள் இருந்து வந்த தகராறை சாதகமாகப் பயன்படுத்தி வேறு யாருடனும் லதா ரகசிய தொடர்பு வைத்து இருப்பாளோ? என்ற சந்தேகமும் வந்தது. இதனால் அவள் மீதான காதல் மறந்து, வெறுப்பு ஏற்பட தொடங்கியது. சம்பவத்தன்று இரவில் வழக்கம்போல் தகராறு முற்றியது. நான் கோபத்தில் அவதூறாக திட்டினேன். என்னிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிவிட்டாள்.
நான் தேடிச் சென்ற போது உள்ளூரில் உள்ள ஒரு கோவிலில் அவள் இருந்ததை அறிந்து கொண்டேன். முதலில் சமாதானமாக பேசிப் பார்த்தேன். அப்போது, அவள் என்னை செக்ஸ் விஷயத்தை காரணம் காட்டி திட்டினாள். இதனால் ஆத்திரம் அடைந்த நான் அவளை கொலை செய்ய முடிவு செய்தேன்.
அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வயல்காட்டு வழியாக அழைத்துச் சென்றேன். ஆள் அரவம் இல்லாத ஒரு இடத்தில் திடீர் என்று லதாவை கீழே தள்ளி கழுத்தை நெரித்தேன். சற்று நேரத்தில் உயிர் பிரிந்தது. உடனே வீட்டுக்கு ஓடிவந்து மண்எண்ணெய் கேனை எடுத்துச் சென்று, லதாவின் உடலில் ஊற்றி தீவைத்து எரித்தேன். அதன் பின்னர் எதுவும் நடக்காதது போன்று வீட்டில் நாடகமாடினேன்.
லதாவை காணாதது குறித்து போலீசுக்கும் தகவல் தெரிவித்தேன். வயல்காட்டில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தது லதாதான் என்பதை போலீசார் உறுதி செய்தால், குடும்பத் தகராறில் அவள் தற்கொலை செய்து கொண்டாள் என்று கூறி நாடகம் ஆடிவிடலாம் என்று திட்டம் போட்டேன். ஆனால் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி நடந்தது தற்கொலை அல்ல, கொலை என்பதை உறுதி செய்து என்னை கைது செய்துவிட்டார்கள் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications