For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிறைய பேர் என்னை போட்டியிடச் சொல்றாங்க... சரியான நேரத்தில் முடிவெடுக்கிறேன்: அப்துல் கலாம்

By Mathi
Google Oneindia Tamil News

Abdul Kalam
பாட்னா: குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவது பற்றி உரிய நேரத்தில் முடிவெடுப்பேன் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் அப்துல்கலாமை வேட்பாளராக நிறுத்தப் போவதாக முலாயம்சிங்குடன் சேர்ந்து ஆவர்த்தனம் செய்து கொண்டிருக்கும் மமதா பானர்ஜி அறிவித்திருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் பதிலுக்குத் தாம் காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் கலாம்தரப்பில் எந்த ஒரு பதிலும் வெளியாகாமல் இருந்தது, அதே நேரத்தில் கலாமிடம் முலாயம்சிங்கும் மமதாவும் பேசி ஒப்புதல் பெற்றிருப்பதாகவும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தன.

இந்நிலையில் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய அப்துல்கலாமிடம் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவீர்களா? என்பது பற்றி கேட்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த அப்துல் கலாம், பல்வேறு அரசியல் தலைவர்கள் என்னைத் தொடர்பு கொண்டு மீண்டும் குடியரசுத் தலைவராக வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்களது இந்த முயற்சியை பாராட்டுகிறேன். அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறென். இது தொடர்பாக உரிய நேரத்தில் முடிவெடுப்பேன் என்றார்.

பாட்னா வந்துள்ள அப்துல்கலாமை விமான நிலையத்துக்கு நேரில் சென்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் வரவேற்றார். நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் கலாம் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டால் ஆதரிக்கக் கூடும் என்று தெரிகிறது.

English summary
APJ Abdul Kalam, who has been named as a Presidential candidate by SP and TMC, on Friday said he will take a proper decision at the right time on entering the race for the high post.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X