10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் வெளியானது! எப்படி தெரிந்துக்கொள்வது? முழு விவரம்
சென்னை: தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் 9 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதியிருந்தனர். இந்நிலையில், இன்று பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
முன்னதான நேற்று முன்தினம் முதலமைச்சர் விஜய் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டிருந்தார். முடிவுகளை வெளியிடுவதில் உள்ள சிக்கல்கள் குறித்தும், உரிய நேரத்தில் நேரத்தில் முடிவுகள் வெளியிடுவதற்கு எடுக்கப்பட வேண்டிய தேவையான நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனையில் பேசப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது ரிசல்ட் வெளியாகியிருக்கிறது. அமைச்சர் ராஜ்மோகன் ரிசல்ட்டை வெளியிட்டிருக்கிறார். மொத்தம் 94.31% தேர்ச்சி விகிதம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரிசல்ட்டை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, results.digilocker.gov.in ஆகிய இணையதள முகவரிகளில் தங்கள் பதிவெண், பிறந்ததேதி ஆகியவற்றைப் பதிவு செய்து அறிந்து கொள்ளலாம்,
பாட வாரியாக
தமிழ் - 98.43%
ஆங்கிலம் - 99.44%
கணிதம் - 97.36%
அறிவியல் - 98%
சமூக அறிவியல் - 97.93%
முதல் 5 மாவட்டங்களை பொறுத்தவரை, புதுக்கோட்டை முதலிடத்திலும், சிவகங்கை 2ம் இடத்திலும், தஞ்சாவூர் 3வது, திருச்சி 4வது, கன்னியாகுமரி 5வது இடமும் பிடித்திருக்கிறது.
மொத்த தேர்ச்சி பெற்றவர்கள்: 8,21,105 (94.31%)
மாணவியர் தேர்ச்சி: 4,19,891 (96.47%)
மாணவர்கள் தேர்ச்சி: 4,01,214 (92.15%)
மாணவர்களை விட 4.32% மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். 2025-ஆம் ஆண்டு தேர்ச்சி சதவீதம் 93.80% ஆக இருந்தது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 0.51% கூடுதலாக உள்ளது.
பள்ளி வாரியாக தேர்ச்சி விகிதம்
தனியார் சுயநிதிப் பள்ளிகள்: 98.14%
அரசு உதவி பெறும் பள்ளிகள்: 94.34%
அரசுப் பள்ளிகள்: 91.86%
100க்கு 100 மதிப்பெண் பெற்ற மாணவர்கள்
தமிழ் - 34 மாணவர்கள்
ஆங்கிலம் - 92 மாணவர்கள்
கணிதம் - 3,194 மாணவர்கள்
அறிவியல் - 10,476 மாணவர்கள்
சமூக அறிவியல் - 3,336 மாணவர்கள்
என மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்று பள்ளி கல்வித்துறை வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
-
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
Chennai Rain: இன்றும் இடி, மின்னலோடு கொட்டப் போகுது! சென்னையில் இருந்து குமரி வரைக்கும் மழை வெளுக்கும்! வானிலை அலர்ட் -
Seeman: யூடியூபர் மாரிதாஸ் கைது! தவெக அரசின் அதிகார திமிரின் உச்சம்! சீமான் கொந்தளிப்பு -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
அடித்து பெய்யப்போகும் கனமழை! கோவை டூ கன்னியாகுமரி.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்?












Click it and Unblock the Notifications