For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரணாப் முகர்ஜி தலை மீது ரூ. 800 கோடிக்கு 'பெட்'!

Google Oneindia Tamil News

Pranab Mukherjee
டெல்லி: கிரிக்கெட்டில் மட்டும்தான் சூதாட்டம் இருக்குமா... குடியரசுத் தலைவர் வேட்பாளர் யார் என்பதிலும் சூதாட்டம் படு சூடாக நடந்து வருகிறதாம். மும்பையைச் சேர்ந்த சூதாட்ட புக்கிகள் இதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனராம். இதில் பிரணாப் முகர்ஜிக்குத்தான் ஆதரவு அதிகம் காணப்படுகிறதாம். அவரது தலைக்கு மட்டும் ரூ. 800 கோடிக்கு பெட் கட்டியுள்ளனராம்.

2வது இடத்தில் பிரதமர் மன்மோகன் சிங் இருக்கிறார். ஆனால் அவருக்கு ஆதரவு மிக மிக குறைவாக காணப்படுகிறதாம். ஆரம்பத்தில் லிஸ்ட்டில் இடம் பெற்றிருந்த சோம்நாத் சாட்டர்ஜி, ஹமீத் அன்சாரி ஆகியோர் இப்போது பட்டியலில் இல்லையாம்.

இதுகுறித்து மும்பையைச் சேர்ந்த புக்கி ஒருவர் கூறுகையில்,

இப்போது கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடக்கவில்லை. எங்களுக்கு வேறு பிழைப்பும் இல்லை. எனவேதான் நாட்டில் நடக்கும் பரபரப்பான நிகழ்வான குடியரசுத் தலைவர் தேர்தலை வைத்து பெட்டிங்கைத் தொடங்கி விட்டோம். வேட்பாளர் தேர்வே பெரும் பரபரப்பாகியிருப்பது எங்களுக்கு பெரும் ஊக்கமாக அமைந்துள்ளது. எதிர்பாராத அளவுக்கு பெட்டிங் தொகை ஏறியபடி உள்ளது. பிரணாப் முகர்ஜி மீதுதான் அதிகம் நம்பிக்கை வைத்து பெட் வைத்து வருகின்றனர் என்றார்.

மமதா பானர்ஜியும், முலாயம் சிங் யாதவும் போர்க்கொடி உயர்த்திய பின்னர் பெட்டிங் சூடு பிடித்துள்ளதாம்.

அப்துல் கலாமும் பிரபலமானவர் என்ற போதிலும் பிரணாப் முகர்ஜி மீதே அதிகம் பேர் நம்பிக்கை வைத்துள்ளனராம். அவர்தான் அடுத்த குடியரசுத் தலைவர் ஆவார் என்றும் புக்கிகள் அடித்துச் சொல்கிறார்கள்.

English summary
With cricket off the board, bookies seem to have latched on to politics. Given the uncertainty over the July 19 presidential polls, Mumbai punters are betting big on who will be the new occupant of the Rashtrapati Bhawan. Finance minister is the punters' choice to be the next president as Rs 800 crore is riding on the unfolding high-voltage political drama. Prime Minister Manmohan Singh is a distant second in the punters' list, while Vice-president Hamid Ansari and ex-Speaker Somnath Chatterjee are virtually out of the race.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X