ரூ. 491 கோடி செலவில் 81 லட்சம் மாணவ- மாணவிகளுக்கு இலவச பை, காலணி : ஜெ. உத்தரவு

முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பள்ளி மாணவ-மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு ஏராளமான நலத்திட்டங்களை அறிவித்துள்ளார். இதுவரை பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள், சீருடைகள், சைக்கிள் ஆகியவை மட்டுமே இலவசமாக வழங்கப்பட்டு வந்தன.
ஆனால், இந்த நடப்பு ஆண்டில் இவற்றுடன் கூடுதலாக இலவச லேப்-டாப், நோட்டுப்புத்தகங்கள், புத்தகப்பை, காலணி, கலர் பென்சில், ஜியாமெட்ரிக் பாக்ஸ், அட்லஸ் ஆகியவையும் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ளது. மாணவர்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து நலத்திட்டங்களும் அனைவரையும் சிறு குறைகூட இல்லாமல் சென்றடைய வேண்டும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பள்ளிக்கல்வி அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார். இந்த திட்டங்களை செயல்படுத்துவதற்கான பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளார்.
81 லட்சம் பேருக்கு அழகிய காலணி
இதைத்தொடர்ந்து, நலத்திட்டங்கள் வழங்குவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு பணியும் தனித்தனி துறையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அட்லஸ் தயாரித்து வழங்கும் பொறுப்பு தமிழ்நாடு பாடநூல் கழகத்திடமும், காலணி, கலர் பென்சில் வழங்கும் பொறுப்பு தொடக்கக்கல்வி இயக்குனரகத்திடமும் வழங்கப்பட்டு இருக்கின்றன.
ஒவ்வொரு நலத்திட்டம் தொடர்பான டெண்டர் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இலவச காலணியைப் பொருத்தவரையில் ஒன்றாம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் 81 லட்சத்து 2 ஆயிரத்து 128 மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இதற்காக அரசு ரூ.94 கோடியே 76 லட்சத்தை ஒதுக்கியது.
81 லட்சம் பேருக்கு காலணிகள் என்றவுடன் குறிப்பிட்ட நான்கைந்து அளவுகளில் தயாரித்து ஒட்டுமொத்தமாக வழங்கிவிடுவார்கள் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அப்படி வழங்கினால் ஒரு மாணவருக்கு அளவு பெரிதாக இருக்கும். மற்றொருவருக்கு அளவு சற்று சிறிதாக இருக்கும். அப்படி நடந்துவிடக்கூடாது என்பதால் ஒவ்வொரு மாணவ-மாணவிக்கும் தனித்தனியே அளவு எடுத்து வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, ஒவ்வொரு மாணவ-மாணவிக்கும் தனித்தனியே பாதத்தின் அளவு எடுத்து காலணிகளை வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. வெளீர் பிரவுன் நிறம், அடர்த்தியான பிரவுன் நிறம், சாம்பல் நிறம் என 3 வண்ணங்களில் காலணிகள் வழங்கப்படும். ஒவ்வொரு பள்ளியிலும் படிக்கும் மாணவர்களின் அளவு எடுக்கப்பட்டு மொத்தமாக தொடக்கக்கல்வி இயக்குனரகத்திற்கு அனுப்பப்படும். இப்படி தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இருந்து வரும் அனைத்து அளவுகளும் பதிவுசெய்யப்பட்டு, அதன் அடிப்படையில் வெவ்வேறு அளவுகளில் அதற்கான குறிப்பிட்ட எண்ணிக்கையில் காலணிகள் தயாரித்து வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications