ஜனாதிபதி தேர்தலில் அப்துல் கலாமை நிறுத்த ஆர்.எஸ்.எஸ். ஆதரவு: பாஜக கூட்டணியும் ஆதரிக்கும்?

ஹரித்வாரில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியதாவது:
நாட்டின் குடியரசுத் தலைவர் தேர்தல் என்பது சிறப்புக்குரியது. இதில் குறிப்பிட்ட சிலர்தான் வாக்களிக்க முடியும்.இருப்பினும் என்னுடைய கருத்தாக இருப்பது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமை மீண்டும் தேர்ந்தெடுக்கலாம் என்பதுதான். அவர்தான் சிறந்த வேட்பாளராக இருப்பார்.
கலாம்ஜியைப் பொறுத்தவரையில் எந்த ஒரு அரசியல் சார்பும் இல்லாதவர். அவருக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது என்றார் அவர்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவதா? அல்லது யாரையும் ஆதரிப்பதா? என்ற குழப்பத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி இருந்துவருகிறது. இந்த நிலையில் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். தலைவர், அப்துல் கலாமை ஆதரித்திருப்பதால் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் அப்துல் கலாமை ஆதரிக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது
கலாமுக்கு தமிழக பாஜக ஆதரவு?
இதனிடையே நாகப்பட்டினத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், குடியரசுத் தலைவர் பதவியானது தமிழ்நாட்டைச் சேர்ந்தவருக்குத்தான் கிடைக்க வேண்டும். இதற்காக கருணாநிதி உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் குரல் எழுப்ப வேண்டும் என்று கூறினார். ஆனால் அப்துல் கலாமின் பெயரை நேரடியாக அவர் குறிப்பிடவில்லை. அதனால் கலாமை மனதில் வைத்துத்தான் தமிழக பாஜக கூறியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications