புதுக்கோட்டை எம்.எல்.ஏவாக கார்த்திக் தொண்டைமான் நாளை பதவியேற்பு!
சென்னை: புதுக்கோட்டை சட்டசபை இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற கார்த்திக் தொண்டைமான் நாளை சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொள்கிறார்.
புதுக்கோட்டை சட்டசபைத் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட கார்த்திக் தொண்டைமான் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் ஜாகிர் உசேன் தோல்வியடைந்தார், இருப்பினும் டெபாசிட்டைத் திரும்பப் பெற்று புதிய வரலாறு படைத்தார்.
இந்த நிலையில் கார்த்திக் தொண்டைமான் நாளை புதிய சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளார். சட்டசபை சபாநாயகர் ஜெயக்குமார் அறையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கார்த்திக் தொண்டைமானுக்கு சபாநாயகர் ஜெயக்குமார் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
இருப்பினும் இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்ள மாட்டார் என்று கூறப்படுகிறது. புதுக்கோட்டை வெற்றி குறித்து ஜெயலலிதா திருப்தியுடன் இல்லை என்று கூறப்படுவதால் பதவியேற்பு நிகழ்ச்சியி்ல அவர் பங்கேற்பது சந்தேகம் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications