ரூ.35 லட்சம் கேட்டு பெங்களூரில் கடத்தப்பட்ட கர்நாடக முன்னாள் எம்.பி.யின் மகள் சென்னையில் மீட்பு
பெங்களூர்: பெங்களூரில் கடத்தப்பட்ட கர்நாடாக முன்னாள் எம்.பி. ஹெச்.ஜி. ராமுலுவின் மகள் 12 மணிநேரத்திற்குள் சென்னை ரயில் நிலையத்தில் மீ்ட்கப்பட்டார்.
கர்நாடக மாநிலத்தில் 4 முறை எம்.பி.யாக இருந்தவர் ஹெச்.ஜி. ராமுலு. அவரது மகள் விஷ்ணுவந்தனா(47). அவர் தனது கணவர் ரவிக்குமாருடன் ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் அவர் தனது கணவருடன் பெங்களூர் வந்தார். விஷ்ணுவந்தனா, ரவிக்குமார் மற்றும் உறவினர் டாலி ஆகிய 3 பேர் கடந்த திங்கட்கிழமை ஜெயநகரில் உள்ள வணிக வளாகத்திற்கு சென்றனர்.
அப்போது அங்கு வந்த ஒரு தம்பதி விஷ்ணுவந்தனாவிடம் தனியாகச் பேச வேண்டும் என்று கூறி அவரை அழைத்துச் சென்றனர். ஆனால் நெடு நேரமாகியும் அவரைக் காணவில்லை. அதன் பிறகே அவர் கடத்தப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து விஷ்ணுவந்தனாவை கடத்தியவர்கள் டாலி மற்றும் ரவிக்குமாருக்கு போன் செய்து ரூ.35 லட்சம் பணம் கொடுத்தால் மட்டுமே அவரை விடுவிப்போம் என்று கூறியுள்ளனர்.
உடனே இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. விசாரணையில் கடத்தல்காரர்கள் விஷ்ணுவந்தனாவை சென்னைக்கு தான் கொண்டு சென்றிருக்க வேண்டும் என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் சென்னை சென்றனர். நேற்று சென்னை ரயில் நிலையத்தி்ல் தனியாக நின்று கொண்டிருந்த விஷ்ணுவந்தனாவை போலீசார் மீட்டு பெங்களூருக்கு அழைத்து வந்தனர்.
அவர் எதற்காக கடத்தப்பட்டார், கடத்தியவர்கள் யார் என்று தெரியவில்லை. விஷ்ணுவந்தனாவிடம் விசாரித்த பிறகு தான் அது தெரிய வரும். இதற்கிடையே பண விவகாரம் காரணமாக யாராவது உறவுக்காரர்கள் கடத்தியிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications