தமிழக மீனவர்களை கைது செய்வேன் - ராஜபக்சேவின் பேச்சுக்கு நாராயணசாமி கண்டனம்
சென்னை: கச்சத்தீவுப் பகுதிக்கு வரும் தமிழக மீனவர்களை கைது செய்வோம் என்று இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே பேசியுள்ளதற்கு மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் நாராயணசாமி கூறியதாவது:
இந்திய மீனவர்களின் நலனில் பிரதமர் அதிக அக்கறை கொண்டு உள்ளார். இலங்கை அதிபர் 20 ஆண்டு சிறை தண்டனை என கூறி உள்ளது பற்றி தமிழக முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆகியோர் பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
இது பற்றி பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கரமேனன் இலங்கை அரசுடன் பேசுவார். எதிர் காலத்தில் இந்திய மீனவர்கள் எந்தவித பாதிப்பின்றி இருக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். தமிழக மீனவர்களுக்கு இலங்கை ராணுவம் மற்றும் கடற்படையால் எந்தவித பாதிப்பும் இல்லாமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இலங்கை முள்ளிவாய்கால் போல் மேலும் பல முள்ளிவாய்கால் சம்பவம் நடக்கும் என இலங்கை அமைச்சர் பேசியது கண்டிக்கத்தக்கது. நாட்டின் உயர் பொறுப்பில் உள்ளவர்கள் நிதானமாக பேச வேண்டும் என்றார்.
சிறுவாணி தடுப்பு அணை பிரச்சினையில் இரு மாநில அரசுகளும் செய்துக் கொண்ட ஒப்பந்த சரத்துகள் படி செயல்பட வேண்டும் என்பது தான் மத்திய அரசின் நிலை. இதை இரு மாநில அரசுகளும் மீறக் கூடாது என்றார் அவர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications