கேரளாவில் ஹோட்டல்களில் அதிகரித்து வரும் உணவுப் பண்ட விலையைக் கட்டுப்படுத்த புதிய சட்டம் வருகிறது
திருவனந்தபுரம்: கேரள ஹோட்டல்களில் உணவுப் பண்டங்களின் விலையைக் கட்டுப்படுத்த கேரள அரசு புதிய சட்டம் கொண்டுவர வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை ஏற்று கேரள அரசும் இதற்கான சட்டத்தை கொண்டுவர திட்டமிட்டுள்ளது.
கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், கொச்சி, கோழிக்கோடு உள்பட நகரங்களில் உள்ள ஹோட்டல்களில் உணவு பண்டங்களின் விலை மிக அதிகமாக இருப்பதாக நீண்ட காலமாக புகார் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரள உயர்நீதிமன்றத்தில் கொச்சியை சேர்ந்த நுகர்வோர் அமைப்பு வழக்கு ஒன்றைத் தொடர்ந்தது.
அந்த அமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கேரளாவின் முக்கிய நகரங்களில் உள்ள ஹோட்டல்களில் இட்லி, தோசை, சப்பாத்தி உள்பட உணவு பண்டங்களுக்கு இஷ்டத்துக்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் சாதாரண மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் ஹோட்டல்களில் உணவு பண்டங்களின் விலையை கட்டுபடுத்த அரசு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரணை செய்த உயர்நீதிமன்ற நீதிபதி கிரிஜெகன், ஹோட்டல்கள் இஷ்டத்துக்கு விலை நிர்ணயம் செய்வதை ஏற்க முடியாது. அத்திவாசிய பொருட்களின் விலை உயர்வு, கூலி உயர்வு போன்ற காரணங்கள் இருந்தாலும் தங்கள் இஷ்டத்துக்கு விலையை உயர்த்தி கொள்வதை அனுமதிக்க முடியாது. எனவே விலையை கட்டுபடுத்த கேரள அரசு புதிய சட்டம் கொண்டு வரவேண்டும் என உத்தரவி்ட்டார்.
இதுபற்றி சட்டப்பேரவையில் கேட்கப்பட்ட கேள்விககு பதில் அளித்த முதல்வர் உம்மன்சாண்டி, ஹோட்டல்களில் விலையை கட்டுபடுத்த சட்டம் கொண்டு வரும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கதக்கது. இந்த உத்தரவின் அடிப்படையில் அடுத்த கூட்ட தொடரில் புதிய சட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications