சுனிதா வில்லியம்ஸ் மீண்டும் ஜூலையில் விண்வெளி செல்கிறார்

கடந்த 2006-ம் ஆண்டு சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றார். அங்கு 6 மாதங்கள் தங்கி ஆய்வு மேற்கொண்டார். இந்த நிலையில் அவரை மீண்டும் சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்ப அமெரிக்காவின் நாசா மையம் முடிவு செய்துள்ளது.
இவர் வருகிற ஜூலை 14-ந்தேதி கஜகஸ்தானில் உள்ள பைகானூர் விண்வெளி தளத்தில் இருந்து புறப்பட்டு செல்கிறார். அவருடன் யூரி மலென் சென்கோ, அதிஹிகோ ஹொசிடு ஆகியோரும் செல்கின்றனர்.
விபத்தில் பலியான கல்பனா சாவ்லாவுக்கு பிறகு இந்திய வம்சாவளியை சேர்ந்த 2 பெண் விண்வெளி வீராங்கனைகளை அமெரிக்காவின் நாசா விண்வெளிக்கு அனுப்பியது.
அவர்களில் ஒருவர் சுனிதா வில்லியம்ஸ் அவர். ஏற்கனவே இவர் அங்கு பயணம் செய்தபோது 195 நாட்கள் தங்கி இருந்துள்ளார். 4 முறை விண்வெளியில் நடந்துள்ளார். அப்போது 29 மணி 12 நிமிட நேரம் செலவழித்துள்ளார் என்ற சாதனைகளை படைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications