சிறை நிரப்பும் போராட்டமா, ஏம்ப்பா சொல்லவே இல்லை...அழகிரியின் 'அழகு'ப் பேச்சு!

Subscribe to Oneindia Tamil

Azhagiri
சென்னை: திமுக அறிவித்துள்ள சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்து கொள்ளலாமா கூடாதா என்பது குறித்து தனது கட்சித் தலைமைதான் முடிவெடுத்து தனக்குத் தெரிவிக்க வேண்டும். அதுகுறித்து எங்களுக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று பட்டும் படாமலும், ஒட்டியும், ஒட்டாமலும், பேசியுள்ளார் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி.

சமீபத்தில் சென்னையில் திமுக செயற்குழுக் கூட்டம் நடந்தது. அதில் மு.க.அழகிரியைத் தவிர அத்தனை பேரும் கலந்து கொண்டனர். கட்சிக்காரர்களை அதிமுக அரசு பொய் வழக்குகள் போட்டு சிறையில் தள்ளுவது தொடர்பாக விவாதித்து முடிவெடுக்க கூட்டப்பட்ட கூட்டம் அது. ஆனால் அன்றைய தினம் தனது மதுரை பண்ணை இல்லத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார் அழகிரி. இதன் காரணமாக அவரால் சென்னைக்கு வந்து கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாமல் போய் விட்டது.

இந்த நிலையில் திடீரென சென்னைக்குக் கிளம்பி வந்தார் அழகிரி. அங்கு அவரை சூழ்ந்த செய்தியாளர்கள், திமுக அறிவித்துள்ள சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்து கொள்வீர்களா என்று கேட்டனர்.

அதற்கு அழகிரி, இது பற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை. மத்திய அமைச்சராக உள்ளதால் போராட்டத்தில் கலந்து கொள்ளலாமா என்பதை பற்றி தி.மு.க. தலைமை தான் முடிவு செய்ய வேண்டும். மேலும் இதுகுறித்து இதுவரை எங்களுக்குச் சொல்லப்படவில்லை. அதை கேட்கத்தான் போய்க் கொண்டிருக்கிறேன் என்று வித்தியாசமாக பதிலளித்தார்.

சரி விலைவாசி உயர்வுதான் உர விலைக்குக் காரணமாமே என்று கேட்டபோது, இதெல்லாம் மீடியாக்கள் பரப்பும் தவறான தகவல் என்று கூறி விட்டு மேற்கொண்டு பேச மறுத்து விட்டு நகர்ந்து போனார் அழகிரி.

அழகிரியை இப்போதெல்லாம் அடிக்கடி விமான நிலையங்களில்தான் செய்தியாளர்கள் சந்தித்துப் பேச முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+