ஜூலை 2ம் தேதி சென்னை ரிசர்வ் வங்கிக்கு விடுமுறை
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஜூலை 2ம் தேதி ரிசர்வ் வங்கியின் சென்னை அலுவலகம் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
இந்திய ரிசர்வ் வங்கியின் சென்னை அலுவலகம் ஜூலை 2ம் தேதி திங்கட்கிழமை அன்று தனது வருடாந்திர கணக்குகளை முடிப்பதற்காக பொது வங்கி மற்றும் அரசாங்க பணிகளை மேற்கொள்ளாது. எனினும் அனைத்து வணிக மற்றும் கூட்டுறவு வங்கிகள் அன்றைய தினம் திறக்கப்பட்டு இயல்பான வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications