சுற்றுலா பயணிகளுக்கு அதிக செலவு வைக்கும் மும்பை
Subscribe to Oneindia Tamil

வெளிநாட்டினர்களை அதிகம் கவரும் நாடுகளில் நம்நாடு முக்கியமான நாடாகும். இங்குள்ள மலைவாசஸ்தலங்களுக்கு வருபவர்கள் அதிகம்.
அதேபோல் மும்பை, சென்னை, டெல்லி போன்ற நகரங்களின் கலை கலாச்சாரங்களை காண வருபவர்கள் அதிகம் உள்ளனர்.
இந்த நகரங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு நாளைக்கு அதிகபட்சம் எவ்வளவு செலவாகிறது என்று கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ட்ரிப் அட்வைசர் என்ற நிறுவனம் நடத்திய இந்த கணக்கெடுப்பில் சுற்றுலா பயணிகளுக்கு அதிகம் செலவு வைக்கும் நகரங்களின் பட்டியலில் மும்பை முதலிடத்தை பிடித்துள்ளது.
தங்கும் விடுதிச் செலவுகள், உணவு, போக்குவரத்துச் செலவுகள், என ஒரு நாளைக்கு 13,017 ரூபாய் செலவாகிறதாம். அதேசமயம், தென்னிந்தியாவில் ஒரு நாளைக்கு 8,537 ரூபாய் செலவாகிறது என்று இந்த கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications