"மேடத்தின் மகள்" பெயரில் போன் போட்டு ஏமாற்றிய மோசடிப் பெண் எங்கே? கிறுகிறுக்க வைக்கும் தகவல்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மு.க.ஸ்டாலின் மருமகள், மருமகளின் தம்பி ஆகியோரது பெயரில் சீட்டிங் வேட்டை நடத்தியதைப் போல "மேடத்தின் மகள்" என்ற பெயரில் இன்னொரு மோசடியும் நடந்திருக்கிறது அம்பலமாகியுள்ளது.

கிருஷ்ணகிரியைச் சேர்ந்த பிரியா என்ற பெண், "பவர்ஸ்டார்" ரேஞ்சுக்கு பணத்தை வாரி இறைத்து அளப்பறை காட்டி வந்திருக்கிறார். அனைவரும் விசாரித்ததில் தாம் "மேடத்தின் மகள்" என்று ஒரு போடு போட்டு அசத்தியிருக்கிறார்.

தாம் மேடத்தின் மகள் என்று கூறி அரசாங்கத்திடம் இருந்து என்ன உதவி வேண்டுமானாலும் வாங்கித் தருகிறேன் என்று உறுதிமொழியளித்து பல லகரங்களை லவட்டியிருக்கிறார். ஸ்டாலின் மருமகள் கிருத்திகா வாய்ஸில் பேசி மோசடி செய்தது போலவே சினிமா துறையில் இந்த பிரியா நுழைந்திருக்கிறார். மேடத்தின் மகள்.. படத் தயாரிப்புல இறங்குகிறார். ஒரே நேரத்தில் 15 படம் இயக்கப் போகிறார் என்றெல்லாம் அளந்துவிட்டு திரை பிரபலங்கள் பலரையும் அலற வைத்து தூக்கத்தைக் கெடுத்திருக்கிறார்.

இன்னும் சில பிரபலங்களை தொடர்பு கொண்டு, அமெரிக்காவில் இருக்கிறேன்.. சீக்கிரம் தமிழகம் வந்து உங்களை நேரில் சந்திக்கிறேன் என்றும் அளந்துவிட்டிருக்கிறார்.

இவரை போலீசார் கைது செய்துவிட்டதாகக் கூறினாலும் உறுதிப்படுத்தக் கூடிய தகவல் எதையும் போலீஸ் தரப்பு தெரிவிக்க மறுத்து வருகிறது. மேலிட விவகாரம் என்பதால் தகவல்களை வெளிப்படுத்தி வம்பில் மாட்டக் கூடாது என்பதில் போலீஸ் தரப்பு உறுதியாகவே இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+