சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. முத்துசெல்வி, குடும்பத்தினர் மீது கொலை மிரட்டல் புகார்

Subscribe to Oneindia Tamil

MLA Muthuselvi
நெல்லை: சங்கரன்கோவில் அதிமுக எம்.எல்.ஏ. முத்துசெல்வி மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்துவதாக எம்.எல்.ஏ.வின் சகோதரர் மனைவி நெல்லை கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தார்.

நெல்லை அருகே உள்ள மானூர் பள்ளமடையைச் சேர்ந்த ராமரின் மகள் சமுத்திரகனி என்பவர் நெல்லை கலெக்டரிடம் சங்கரன்கோவில் அதிமுக எம்.எல்.ஏ. முத்துசெல்வி மீது புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

சங்கரன்கோவில் காந்தி நகர் 1வது தெருவைச் சேர்ந்த சங்கரலிங்கம் மகன் இளையராஜாவுக்கும் எனக்கும் கடந்த 2010ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 15 பவுன் நகை, ரூ.70,000 மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் கொடுக்கப்பட்டது. எனது கணவர் சரிவர வேலைக்கு செல்வதில்லை. இதனால் நான் கூலி வேலைக்கு சென்று குடும்பம் நடத்தினேன்.

எனது மாமா சங்கரலிங்கம் ரூ.50,000 பணம் கேட்டு கொடுமைப்படுத்தினார். தொடர்ந்து அத்தை ராஜம்மாள், எனது கணவரின் சகோதரியும் எம்.எல்.ஏ.வுமான முத்துசெல்வி மற்றும் குடுமபத்தினர் என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுகின்றனர். எனவே எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+