அரிசி விலையில் கிடுகிடு உயர்வு! தமிழக மக்கள் அதிர்ச்சி!

தமிழகத்தில் அரிசிகளின் விலை கடுமையான உயர்வை சந்தித்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னையில் இட்லி அரிசி கிலோ ரூ.20 என்றும், பொன்னி அரிசி ரூ.25 என்றும் விற்கப்பட்டது. ஆனால் தற்போது பொன்னி அரிசி ரூ.45 என்று விற்கப்படுகிறது. அதேபோல ரூ.45க்கு விற்கப்பட்ட பாசுமதி அரிசி, தற்போது ரூ.80க்கு விற்கப்படுகிறது.
மேலும் வெள்ளை பொன்னி அரிசி ரூ.38க்கும், பாவர்ட்லா பொன்னி அரிசி ரூ.35க்கும் சிகப்பு பொன்னி ரூ.32க்கும் விற்கப்படுகிறது. புழுங்கல் அரிசி இப்படி என்றால், பச்சரிசி கிலோ ரூ.29க்கு விற்கப்படுகிறது. இதனால் அரிசி வாங்க மளிகை கடைகளுக்கு வரும் மக்கள் இடையே கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இது குறித்து சென்னையை சேர்ந்த அரிசி வியாபாரிகள் சிலர் கூறியதாவது,
இந்த ஆண்டு தமிழகத்தில் மழை குறைவால் அரிசி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அரிசியை கடைகளுக்கு கொண்டு செல்லும் வாகனங்களுக்கான கூலி கடுமையாக உயர்ந்துள்ளது. லாரி ஓட்டுநர்களை கேட்டால், டீசல் விலை உயர்வை கை காட்டுகின்றனர்.
இந்த நிலையில் வெளிநாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் உள்நாட்டில் அரிசி தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கிறது. அரிசி மூட்டைகளை மொத்தமாக பதுக்கும் சிலர், வெளிநாடுகளுக்கு அனுப்பி விடுகின்றனர். இதனால் தமிழகத்தில் அரிசி விலை உயர்வு தவிர்க்க முடியாமல் உள்ளது.
எனவே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அரிசியை தடுத்து நிறுத்தி, உள்நாட்டில் அரிசி விலையை குறைக்க தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications