விருதுநகரில் அதிமுக பெண் கவுன்சிலர், கணவர் வெட்டிக் கொலை
விருதுநகர்: விருதுநகரில் அதிமுக நகராட்சி கவுன்சிலர் தங்கபாண்டியம்மாள் மற்றும் அவரது கணவர் ஆகியோரை 6 பேர் கொண்ட கும்பல் வெட்டிப் படுகொலை செய்தது.
விருதுநகர் மேலத்தெருவைச் சேர்ந்தவர் எஸ்.ஆர். நாகராஜன். அதிமுக நிர்வாகி. அவரது மனைவி தங்கபாண்டியம்மாள். விருதுநகர் நகராட்சி 21வது வார்டு கவுன்சிலர். இருவரும் நேற்று மாலை 6 மணிக்கு பைக்கில் விருதுநகர் தேசபந்து மைதானம் பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சுமோ கார் அவர்களின் பைக்கில் மோதுவது போல் வந்தது. இதில் அதிர்ச்சி அடைந்த நாகராஜன், தங்கபாண்டியமாள் இருவரும் கீழே இறங்கினர்.
அப்போது சுமோவில் இருந்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் 6 பேர் கொண்ட கும்பலும் காரில் இருந்து கீழே இறங்கியது. அவர்கள் நாகராஜன், தங்கபாண்டியம்மாள் ஆகிய இருவரையும் சரமாரியாக வெட்டினர். பின்னர் அக்கும்பல் காரில் ஏறி தப்பிச் சென்றது. இதில் படுகாயமடைந்த கணவன், மனைவி இருவரும் ரத்த வெள்ளத்தில் ரோட்டில் கிடந்தனர். அப்பகுதி மக்கள் இருவரையும் மீ்ட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொணடு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பாண்டியம்மாள் இறந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நாகராஜன் இறந்தார். அவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications