அமைச்சர்கள் ராஜினாமா: ஆளுநரை சந்தித்து ஆலோசனை நடத்தினார் கர்நாடக முதல்வர் சதானந்த கவுடா

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக அமைச்சர்கள் 8 பேர் ராஜினாமாவைத் தொடர்ந்து ஆளுநர் பரத்வாஜை இன்று காலை நேரில் சந்தித்து முதல்வர் சதானந்த கவுடா ஆலோசனை நடத்தினார்.

கர்நாடக முதல்வர் சதான்நத கவுடாவை மாற்றியாக வேண்டும் என்ற எதியூரப்பா முகாமின் கோரிக்கை உச்சகட்டத்தை அடைந்துள்ளது. முதல்வரை நேரில் சந்தித்து 8 அமைச்சர்கள் நேற்று ராஜினாமா கடிதம் கொடுத்தனர். மேலும் 2 அமைச்சர்கள் ராஜினாமா செய்ய தயாராக உள்ளனர்.

அதேபோல் சதானந்த கவுடாவை மாற்றாவிட்டால் 60 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்யவும் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மாநில அரசியல் நிலைமை குறித்து ஆளுநர் பரத்வாஜை இன்று காலை சதானந்த கவுடா சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இதனிடையே அமைச்சர்களின் ராஜினாமா ஏற்றுக் கொள்ளுமாறு கர்நாடக பாஜக தலைவர் ஈஸ்வரப்பா கூறியுள்ளார். மேலும் பாரதிய ஜனதா கட்சி மேலிடமும் கர்நாடக கட்சி விவகாரத்தில் நீங்களே ஒருமுடிவெடுத்துக் கொள்ளுங்கள்.. டெல்லிக்கு கொண்டுவர வேண்டாம் என்றும் ூறிவிட்டது. இதனால் சதானந்த கவுடா பதவி விலக வேண்டிய நிர்பந்தத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+