தமிழகத்தில் 12 புதிய ரயில்கள் இயக்கப்படும்- தென்னக ரயில்வே அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

Train
சென்னை: மத்திய ரயில்வே பட்ஜெட்டின் அறிவிப்பை தொடர்ந்து, தமிழகத்தில் 12 புதிய ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

திருச்சியில் இருந்து திருநெல்வேலிக்கு மதுரை வழியாக எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும்.

சென்னை சென்ட்ரல்-பெங்களூர் இடையே டபுள் டெக்கர் ஏ.சி புதிய ரயில் இயக்கப்பட உள்ளது.

நெல்வேலியில் இருந்து தாதருக்கு கோவை, மங்களூர் வழியாக புதிய ரயிலும், விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறைக்கு தினசரி பயணிகள் ரயில் இயக்கப்படும்.

மன்னார்குடியில் இருந்து புதன், வெள்ளி, ஞாயிறு ஆகிய 3 நாட்களில் புதிய ரயில் இயக்கப்படும்.

மதுரையில் இருந்து ஈரோடு, சேலம், காட்பாடி வழியாக காச்சிகேடாவுக்கு ஞாயிறு தோறும் புதிய ரயில் இயக்கப்படும்.

ஈரேட்டில் இருந்து கோவை வழியாக பாலக்காடுக்கு தினசரி ரயிலும், மன்னார்குடியில் இருந்து திருப்பதிக்கு வாரம் 3 முறை ரயிலும் இயக்கப்படும்.

விழுப்புரத்தில் இருந்து காட்பாடிக்கு தினமும் 3 ரயில்களும், மன்னார்குடியில் இருந்து திருச்சி வழியாக மானாமதுரைக்கு தினசரி ரயிலும் இயக்கப்படும்.

பெங்களூரு-சேலம் ரயில், நாகூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி-மதுரை இடையே வாரம் இருமுறை இயக்கப்பட்டு வந்த ரயில் ராமேஸ்வரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும், ராமேஸ்வரத்தில் இருந்து திருப்பதிக்கு வியாழன், சனிக்கிழமை அன்று ராமேஸ்வரத்தில் இருந்து ரயில் புறபட்டு செல்லும்.

திருச்சி- நாகூர் தினசரி இயக்கப்படும் ரயில் காரைக்கால் வரை நீட்டிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ஆனால் புதிய ரயில்கள் இயக்கப்படும் தேதி பின்பு அறிவிக்கப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+