51 எம்.எல்.ஏக்கள் என்னை முதல்வராக்க ஆதரிக்கிறாங்க..: பட்டியலை வெளியிட்டார் ஷெட்டர்
பெங்களூர்: கர்நாடக ஆளும் பாரதிய ஜனதாவில் பூதாகரமாக வெடித்துள்ள கோஷ்டி மோதலால் முதல்வர் சதானந்த கவுடா தரப்பும் முன்னாள் முதல்வர் எதியூரப்பா தரப்பும் தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றன.
எதியூரப்பாவின் ஆதரவாளரான ஜெகதீஷ் ஷெட்டர் இல்லத்தில் இன்று காலை ஆதரவு எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. ஏற்கெனவே 8 அமைச்சர்கள் ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்ட நிலையில் இன்றைய கூட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தக் கூட்டத்தின் முடிவில் அதிரடியாக ஜெகதீஷ் ஷெட்டர் ஒரு பட்டியலை வெளியிட்டார். தம்மை ஆதரிக்கும் 51 எம்.எல்.ஏக்களின் பெயர் அதில் இடம்பெற்றிருந்தது. மேலும் தம்மை ஆதரிக்கும் எம்.பிக்கள் பட்டியலையும் அவர் வெளியிட்டார். கர்நாடக சட்டப்பேரவையில் பாஜகவின் பலம் 120. தற்போது 51 எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்துவிட்டால் ஆட்சி கவிழ்ந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே பாஜக மேலிட அழைப்பை ஏற்று முதல்வர் சதானந்த கவுடா டெல்லி சென்றிருக்கிறார். இந்நிலையில் எதியூரப்பா கோஷ்டியானது வரும் 5-ந் தேதிக்குள் புதிய முதல்வராக ஜெகதீஷ் ஷெட்டரை நியமிக்க வேண்டும் என்று கெடுவிதித்துள்ளதாகவும் இல்லையெனில் கூண்டோடு ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்த்ள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்!










Click it and Unblock the Notifications