அமெரிக்காவில் பெங்களூர் இளைஞர் தற்கொலை: காக்னிஸன்ட் விளக்கம்!

அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்தில் டெலவேர் நகரில் பவன் குமார் தற்கொலை செய்து கொண்டார் (அளவுக்கதிக போதை மருந்து உபயோகம்). அதற்கு இரு வாரங்களுக்கு முன்பு ஒரு அமெரிக்கப் பெண்மணியை கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்தவர் பவன்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.
பவன் குமார் உடலை இந்தியாவுக்குக் கொண்டுவரும் விவகாரத்தில் முரண்பட்ட நிலையை அவரது குடும்பத்தினர் கூறிவந்தனர். அவர் உடலை இந்தியாவுக்குக் கொண்டுவருவதற்கு சம்பந்தமே இல்லாத, முன் நிபந்தனைகள் பலவற்றை குடும்பத்தினர் வைத்துள்ளதாக தெரிவி்த்துள்ளது காக்னிஸன்ட்.
இது தொடர்பாக நேற்று காக்னிஸன்ட் அளித்துள்ள விளக்கம்:
பவன் குமார் உடலை இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டுமானால் அதற்காக விண்ணப்பங்கள், ஆவணங்களில் அவரது குடும்பத்தினர் கையெழுத்திட வேண்டும்.
பவன்குமார் பணியாற்றிய நிறுவனம் என்ற முறையில் நாங்கள் அதற்கு உதவ முன்வந்தோம். ஆனால் அவரது குடும்பத்தினர் பவன் குமார் உடலைப் பெற்றுக் கொள்ள நிபந்தனைகள் விதிக்க ஆரம்பித்துள்ளனர்.
தங்கள் வழக்கறிஞர்களோடு காக்னிஸன்ட் அலுவலகத்துக்கு வந்த பவன்குமார் குடும்பத்தினர், அந்த உடலை இந்தியாவுக்கு வரவழைக்க வேண்டுமானால், பிரேத பரிசோதனை அறிக்கையும் உடன் தர வேண்டும் என்றனர்.
மேலும் பவன்குமாருக்கு உள்ள கடன்கள், அவர் தற்கொலை செய்து கொள்ளும் முன் எழுதி வைத்த கடிதம், வங்கியில் உள்ள ரொக்க இருப்பு விவரம், அவருக்கு சொந்தமான இதர சொத்துகள் பற்றிய விவரங்களைத் தரும் பொறுப்பை காக்னிஸன்ட்தான் ஏற்க வேண்டும் என்றனர்.
மேலும் அவர்கள் குடும்பத்தினர் இருவர் அமெரிக்கா போய் உடலைப் பெற்று வருவதற்கான மொத்த செலவையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தனர்.
இத்தனைக்குப் பிறகும், அமெரிக்காவில் உள்ள அந்த அந்த மாவட்ட அட்டர்னி, மருத்துவ அலுவலர், நியூயார்க்கில் உள்ள இந்திய தூதர், மரணப் பதிவு அலுவலகம் என அனைத்து அதிகாரிகளையும் தொடர்பு கொள்ள முயன்று வருகிறோம்.
ஆனால் பவன் குமார் குடும்பத்தினரோ, அவர் உடலைக் கொண்டு வருவதற்கான படிவத்தில் கையெழுத்திட மறுத்து வருகின்றனர்.
ஒருவர் இறந்துவிட்டால், அந்த உடலைப் பெறுவதற்குதான் குடும்பத்தினர் அதிக முக்கியத்துவம் தருவார்கள் என்ற நம்பிக்கையில் நாங்கள் செயல்பட்டோம்.
ஆனால் அவரது குடும்பத்தினரோ, அதற்கு சம்பந்தமே இல்லாத பல நிபந்தனைகளை முன் வைக்கின்றனர்.
பவன்குமார் குடும்பத்தினர் அந்தப் படிவத்தில் கையெழுத்திட்டு தருவார்கள் என்ற நம்பிக்கையில் இப்போதும் காக்னிஸன்ட் அவர்களுக்கு உதவ தயாராக உள்ளது.
-இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications