மக்கள் நலப் பணியாளர்கள் கோரிக்கையை நிராகரித்த சென்னை ஹைகோர்ட்
சென்னை: பணி நீக்க விவகாரம் தொடர்பாக மக்கள் நலப் பணியாளர்கள் சங்க தலைவரும், பொதுச் செயலாளரும் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள் 13,500 பேரை அதிமுக அரசு கடந்த நவம்பர் மாதம் 8ம் தேதி இரவோடு இரவாக பணிநீக்கம் செய்தது. இதை எதிர்த்து தமிழ்நாடு மக்கள் நலப் பணியாளர்கள் முன்னேற்ற சங்கம், திண்டுக்கல் மாவட்ட மக்கள் நலப் பணியாளர்கள் நலச்சங்கம் ஆகியவை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சுகுணா பணி நீக்க உத்தரவை ரத்து செய்து, அவர்களை உடனே பணியில் சேர்க்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். ஆனால் தமிழக அரசு இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தர்மராவ், வேணுகோபால் அடங்கிய பெஞ்ச் நீதிபதி சுகுணாவின் உத்தரவுக்கு தடை விதித்தது. இதை எதிர்த்து மக்கள் நலப் பணியாளர்கள் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மக்கள் நலப் பணியார்களுக்கு 5 மாத சம்பளம் வழங்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி மக்கள் நலப்பணியாளர்கள் சங்க தலைவர் மதிவாணன், பொதுச் செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது,
ஏற்கனவே சங்க பொதுச் செயலாளராக இருந்த பழனி சமீபத்தில் நடந்த சங்க தேர்தலில் தோல்வி அடைந்துவிட்டார். இதை உறுப்பினர்களுக்கு தெரிவிக்காமலேயே நீதிமன்றத்தில் 5 மாத சம்பளத்தை பெற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். இது தவறான தகவலாகும். அவர் பெய்யான தகவல் தெரிவித்துள்ளார். எனவே இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அப்பீல் மனுவை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அதில் தெரிவித்திருந்தனர்.
இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள் அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இது குறித்து நீதிபதிகள் கூறுகையில்,
மனுதாரரின் சார்பாக அவரது வழக்கறிஞர் கொடுத்த தகவலின்பேரில் தான் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த தகவல் தவறானது என்றால் அதைக் கொடுத்த பழனி மீது சங்கத்தினர் கிரிமினல் வழக்கு போடலாம். ஆனால் இந்த உத்தரவை மறுஆய்வு செய்ய முடியாது. எனவே, மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்றனர்.
-
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
அனுமதியின்றி எடுக்கப்படும் கற்களுக்கு டன் 1க்கு வெறும் ரூ.25 அபராதம் ? கனிமவளத்துறைக்கு நோட்டீஸ்












Click it and Unblock the Notifications