For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரதமராக அனைத்து சட்டத்தகுதிகளும் கொண்டவர் சோனியா - கலாம் பேட்டி

By Shankar
Google Oneindia Tamil News

Abdul Kalam
நொய்டா: பிரதமராக வருவதற்கு இந்திய அரசியல் சாசன சட்டப்படி சோனியா காந்தி தகுதியானவர்தான் என முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மீண்டும் தெரிவித்தார்.

நொய்டாவில் நடைபெற்ற மருத்துவமனை செவிலியர் மாநாட்டில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "பிரதமர் பதவிக்கு சட்டப்படி சோனியா காந்தி தகுதியானவர்தான் என்பது குறித்து நான் ஏற்கெனவே எனது புத்தகத்தில் எழுதியுள்ளேன். சோனியாவை இந்தியக் குடிமகள் என்று உச்ச நீதிமன்றமே அறிவித்திருக்கிறது.

சோனியாதான் பிரதமராக வேண்டுமென்று அதிக தொகுதிகளை வென்ற கட்சி கூறுமாயின், அவரைத்தான் பிரதமராக குடியரசுத் தலைவர் நியமிக்க முடியும். ஆனால், அவர் அவ்வாறு செய்யவில்லை.

மாறாக, டாக்டர் மன்மோகன் சிங்கை பிரதமராக்கினார். இதில் எந்த சர்ச்சைக்கும் இடமில்லை. இதை அரசியலாக்குவதும் தேவையற்றது," என்றார் கலாம்.

கலாமின் இந்த தொடர் பேட்டிகள் மற்றும் சோனியா ஆதரவு கருத்துகள் மூலம், வரும் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக சோனியா முன்னிறுத்தப்படலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது.

English summary
Rejecting controversy over his book, former President A P J Abdul Kalam today asserted that Sonia Gandhi was "Constitutionally" eligible to be appointed as the Prime Minister when Congress emerged as the largest party in 2004 elections
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X