இன்டர்நெட்டில் காட்டுத் தீயாக பரவும் பிங்கி மருத்துவப் பரிசோதனை வீடியோ!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் தடை ஓட்டப் போட்டியில் பங்கேற்று தங்கம் வென்றவர் பிங்கி. இவர் மீ்து சமீபத்தில் ஒரு பெண் கொல்கத்தா போலீஸில் புகார் கொடுத்தார். அதில்,பிங்கி ஒரு ஆண் என்றும் தன்னுடன் அவர் வசித்து வந்ததாகவும், தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார் என்றும் அப்பெண் தனது புகாரில் கூறியிருந்தார்.
இதையடுத்து பிங்கி கைது செய்யப்பட்டார். அவருக்கு கொல்கத்தா மருத்துவமனையில் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. மேலும் ஒரு முக்கிய சோதனையும் நடத்தப்படவுள்ளது.
இந்த நிலையில் ஒரு தனியார் மருத்துவமனையில் அவருக்கு நடந்த மருத்துவப் பாலின பரிசோதனையின் காட்சி அடங்கிய வீடியோ பதிவு ஒன்று இன்டர்நெட்டில் வெளியாகி விட்டது. 29 விநாடிகள் இந்த காட்சி ஓடுகிறது. அந்த சோதனையின்போது பிங்கி உடலில் ஆடைகள் இன்றி காணப்படுகிறார். அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்படுவது போல காட்சி உள்ளது.
பிங்கி முதல் முறையாக கைது செய்யப்பட்டபோது அவருக்கு கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் போலீஸார் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றிருந்தனர். அங்கு நடந்த மருத்துவப் பரிசோதனை காட்சிதான் தற்போது வெளியாகியுள்ளதாக கருதப்படுகிறது.
இந்த வீடியோ வெளியீடு குறித்து பிங்கியின் வக்கீல் துஹின் ராய் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அந்த வீடியோவை நான் இதுவரை பார்க்கவில்லை. ஆனால் இதை வெளியிட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். இது மிகவும் கேவலமான, கொடூரமான செயல்.
பிங்கியின் வழக்கு ஜூலை 12ம் தேதி கோர்ட்டுக்கு வரும்போது இந்தப் பிரச்சினையை நாங்கள் எழுப்புவோம் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications