இன்று ராத்திரி நித்தியானந்தா ஆசிரமத்தில் பெரிய்ய்யய யாகம்..!

Subscribe to Oneindia Tamil

Nithyanantha
திருவண்ணாமலை: கொடைக்கானலில் தனது ஆதரவாளர்களுடன் கேம்ப் போட்டிருந்த நித்தியானந்தா தற்போது திருவண்ணாமலைக்கு ஷிப்ட் ஆகியுள்ளார். அங்கு இன்று இரவு அவர் மிகப் பெரிய யாகம் ஒன்றை நடத்தப் போகிறாராம். இது எதிரிகளை அழிப்பதற்காக நடத்தப்படும் யாகமாம். இதனால் ஏற்பாடுகள் பலமாக இருக்கிறதாம்.

நித்தியானந்தாவுக்கு முன்பு ஒரு பிரச்சினைதான் இருந்தது. இப்போது பல பிரச்சினைகள். எங்கு போனாலும் பிரச்சினையாகவே இருக்கிறது. சமீபத்தில் தனது ஆதரவாளர்கள் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்டோருடன் கொடைக்கானலுக்குப் படையெடுத்தார் நித்தியானந்தா.அங்கு ஒரு ஹோட்டலில் 40க்கும் மேற்பட்ட அறைகளைப் புக் செய்து தங்கியுள்ளனர்.

இந்த நிலையில் இன்றுதிடீரென அங்கிருந்து கிளம்பி திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்தார் நித்தியானந்தா. அவருடன் ஆதரவாளர்களும் வந்துள்ளனர். பெளர்னமியையொட்டி தனது ஆசிரமத்தில் ராத்திரி முழுவதும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பார் நித்தியானந்தா. அதற்கு சத்சங்கம் என்று அவர்கள் பெயர் வைத்துள்ளனர். ஆனால் இந்தமுறை இன்று காலையிலேயே பேச்சை தொடங்கி விட்டார்.

ஏன் இந்த திடீர் மாற்றம் என்று நித்தியானந்தா ஆதரவாளர்கள் சிலரிடம் கேட்டபோது, சுவாமிக்கு ஏகப்பட்ட சிக்கல்கள். எதிரிகளின் வியூகங்களிலிருந்து தப்பிக்க இன்று இரவுமிகப் பெரிய யாகம் ஒன்றை நடத்துகிறார். இதனால்தான் சத்சங்கத்தை பகலுக்கு மாற்றி விட்டார் என்கிறார்கள்.

ராத்திரி நடக்கப் போவது என்ன மாதிரியான யாகம் என்று தெரியவில்லை. இருந்தாலும் யாகத்திற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகிறதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+