தாய்லாந்தில் டூரிஸ்ட் பஸ் மின் கம்பத்தில் மோதி 2 இந்தியர்கள் உள்பட 10 பேர் பலி
பாங்காக்: தாய்லாந்தின் கோ பாங்கன் தீவுக்கு சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற பேருந்து நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 2 இந்தியர்கள் உள்பட 10 பேர் பலியாகினர், 17 பேர் படுகாயம் அடைந்தனர்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து 24 சுற்றுலாப்பயணிகள் மற்றும் 3 பணியாட்களுடன் பேருந்து ஒன்று கோ பாங்கன் தீவுக்கு நேற்றிரவு 7.30 மணிக்கு புறப்பட்டது. அந்த பேருந்து இன்று அதிகாலை 5.30 மணி அளவில் தாகியான் தாங்கில் உள்ள ஒரு கிராமத்திற்கு அருகே சென்று கொண்டிருக்கையில் பேருந்து நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த பெரிய மின் கம்பத்தில் மோதியது. பேருந்து மோதிய வேகத்தில் அந்த மின் கம்பம் பேருந்தின் மீதே விழுந்தது.
இந்த விபத்தில் பேருந்து ஓட்டுனர், 2 இந்தியர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர், 17 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில் பேருந்தின் முன் பக்கம் உள்ள வலது டயர் வெடித்ததால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் வேகமாக மோதியது என்று தெரிய வந்துள்ளது என்று எம்சிஓடி ஆன்லைன் செய்திகள் தெரிவித்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications