கலகக் குரல்களை மகனின் கல்யாண ரிசப்சன் மூலம் கட்டுப்படுத்திய நிதின் கத்காரி

கத்காரியின் மகன் கல்யாணத்தின் போது
- கத்காரியை ஆர்.எஸ்.எஸ். 2 வது முறையாக பாஜக தலைவராக்கிய விவகாரத்தில் அத்வானி உள்ளிட்ட பெருந்தலைகள் கடுப்பில் இருந்தனர்
- ஜார்க்கண்ட் மாநில ராஜ்யசா தேர்தலில் அனுஷ்மன் மிஸ்ராவுக்கு ஆதரவு தந்த விவகாரத்தில் கடும் எதிர்ப்பை சந்தித்திருந்தார் கத்காரி
- கர்நாட மாநில பாஜகவில் எதியூரப்பா ஆதரவு கோஷ்டி மீண்டும் போர்க்கொடி தூக்கியிருந்தது..
- குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பான முடிவுகளால் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் கூட கலகலத்த நிலையில் இருந்தது..
- நரேந்திரமோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கக் கூடாது பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறியிருந்தார்..
- சிவசேனாவோ பிரதமர் வேட்பாளரை உடனே அறிவிக்கனும் என்று வலியுறுத்தி வந்தது..
அதேபோல் பொதுவாக டெல்லியில் அதிகம் தலைகாட்டாத ஒரு தேசிய கட்சியின் தலைவர் என்ற இமேஜையும் வாங்கி வைத்திருந்தார் கத்காரி.. இதற்கு முற்றுப் புள்ளி வைப்பது போல டெல்லியில் மகன் கல்யாண ரிஷப்ஷனை நடத்தி தன்னோட "பலத்தை" நிரூபித்தார்.
பிரதம மன்மோகன்சிங், குடியரசுத் தலைவர் வேட்பாளர் சங்மா, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம், மத்திய அமைச்சர்கள் அந்தோணி, சரத்பவார், விலாஷ்ராவ் தேஸ்முக், நாராயணசாமி என காங்கிரஸ் பட்டாளம் ஒரு பக்கம்..
கத்காரிக்கு மனதுக்குள்ள எதிர்ப்புகாட்டி வரும் அத்வானி, சுஸ்மா ஸ்வராஜ் மட்டுமில்லாது கர்நாடக முதல்வர் சதானந்த கவுடா, கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர், பீகார் துணை முதல்வர் சுஷில் மோடி, அருண்ஜேட்லி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி , மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ்சிங் செளகான், ராஜ்நாத்சிங், முரளி மனோகர் ஜோஷி மற்றும் ஆர்.எஸ்.எஸ். பட்டாளமும் குவிந்திருந்தது.
தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, சுபத்ரா ராய், யோகா குரு பாபா ராம்தேவ் மற்றும் திரை உலக பிரபலங்களும் குவிந்திருந்தனர்.
2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் என்பது பாரதிய ஜனதாவுக்கு ஒரு அருமையான வாய்ப்பு அதை விட்டுவிடக் கூடாது என்பதில் கத்காரி உறுதியாக இருந்தார். அதற்கு முன்னதாக கர்நாடகம் மற்றும் குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதில் மோடியை முதல்வர் வேட்பாளர் என்பதில் ஆர்.எஸ்.எஸ். உறுதியாக இருக்கிறது. ஆனால் கர்நாடகத்தில் அப்படி ஒரு முடிவை ஆர்.எஸ்.எஸ். எடுக்கவில்லை.
கத்காரியை வலுவாக ஆதரிக்கும் ஆர்.எஸ்.எஸ். கட்சி நிர்வாகிகளையும் கூட்டணிக் கட்சிகளையும் அரவணைத்துச் சென்றதால்தான் தற்போது முளைத்திருக்கும் அனைத்து சிக்கல்களுக்கும் தீர்வு காண முடியும் என்று தொடர்ந்து அறிவுறுத்தி வந்தது.
இதை கவனத்தில்கொண்டுதான் மகனுக்கு மஹாராஷ்டிராவில் ஒரு ரிசப்சன், டெல்லியில் ஒரு ரிசப்சன் என அமர்க்களப்படுத்தியிருக்கிறாராம் கத்காரி.
இதேபோல் குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக பாஜக ஆளும் அனைத்து மாநில முதல்வர்கள் கூட்டத்தையும் அத்வானியின் வீட்டில் கூடி அசத்தியும்விட்டார்
மகனின் கல்யாணத்தை வைத்து அனைத்து தரப்பினருடம் அளாவளாவி எல்லோரது ஆதரவையும் கத்காரி பெற்றதாகக் கூறப்படுகிறது. அனைவரும் ஆதரிக்கிறார்களா? இல்லையா? என்பதை விட சற்றே சமாதானமாகியிருக்கின்றனர் என்றே கூறலாம்... குறிப்பாக கர்நாடக முதல்வர் சதானந்த கவுடாவிடம் மாநில பிரச்சனை குறித்து விரிவாக விவாதித்திருக்கிறார். அதன் பிறகுதான் கர்நாடக அரசியலில் எழுந்த புயல் சற்றே தணிந்தது என்று சுட்டிக்காட்டுகின்றனர்.












Click it and Unblock the Notifications