அடிக்கடி ஏன் லீவ் போடுறீங்க... ஆசிரியையை செருப்பால் அடித்த அதிமுக பிரமுகர் கைது!
சேலம்: ஒன்றாவது வகுப்பு படிக்கும் தனது மகளின் பள்ளிக்குச் சென்ற ஒரு அதிமுக பிரமுகர், அவளது வகுப்பு ஆசிரியையுடன் வாக்குவாதம் செய்து செருப்பால் அடித்து விட்டார். இதைப் பார்த்து ஆவேசமடைந்த ஆசிரியர்கள் அத்தனை பேரும் அவரை சூழ்ந்து கொண்டு போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீஸார் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவர் செந்தாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். இதே பள்ளியில்27 வயதான இவரது மனைவி சுகன்யாவும் ஆசிரியையாக உள்ளார்.
நேற்று இப்பள்ளிக்கு உள்ளூர் அதிமுக பிரமுகர் சின்னத்துரை என்பவர் தனது மகளுடன் வந்தார். சின்னத்துரையின் மகள் சுகன்யாவின் வகுப்பில் ஒன்றாவது படித்து வருகிறாள்.
நேற்று மதியம் பள்ளிக்கு வந்த சின்னத்துரை, ஆசிரியை சுகன்யாவை சந்தித்து, ஏன் அடிக்கடி லீவு போடுகிறீர்கள். இப்படி லீவு போட்டால், என் குழந்தைக்கு யார் பாடம் சொல்லித் தருவது என்று கேட்டுள்ளார். அதற்கு ஆசிரியை சுகன்யா பதிலளித்துள்ளார். அப்போது திடீரென ஆசிரியை சுகன்யாவை செருப்பால் அடித்து விட்டார் சின்னத்துரை.
இதனால் அங்கு பரபபரப்பு ஏற்பட்டது. அத்தனை ஆசிரியர்களும், மாணவர்களும், அங்கு திரண்டனர். சினத்துரையை சுற்றிச் சூழ்ந்து கொண்டனர். அவர் தப்பி விடாமல் அத்தனை பேரும் ஆவேசமாக சூழ்ந்து நின்றனர். பின்னர் போலீஸாருக்குத் தகவல் போனது.
போலீஸார் விரைந்து வந்து சின்னத்துரையைக் கைது செய்தனர். அவர் குடித்து விட்டு வந்திருந்தது விசாரணையில் தெரிய வந்தது. அவர் மீது, ஆசிரியையை பணி செய்ய விடாமல் தடுத்தது, அசிங்கமாக பேசியது, செருப்பால் அடித்தது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் போடப்பட்டுள்ளது.
பின்னர் அவரை ஆத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் போலீஸார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications