கல்வி உரிமை சட்டம்: ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து மனு தாக்கல் செய்ய ராமதாஸ் கோரிக்கை
சென்னை: கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகள் இட ஒதுக்கீடு வழங்க மறுத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபட் செய்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி சமூக மற்றும் பொருளாதார அடிப்படையில் நலிவடைந்த குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டிய 25 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தங்கள் குழந்தைகளுக்கு சென்னையில் உள்ள சில தனியார் பள்ளிகள் இடம் ஒதுக்க மறுத்துவிட்டதை எதிர்த்து சில பெற்றோர்கள் தொடர்ந்த வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்ததற்கு தமிழக அரசின் பொறுப்பின்மையும், அக்கறை இன்மையுமே காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை. தமிழக அரசுக்கு அக்கறை இருந்திருந்தால் இவ்வழக்கில் அரசின் சார்பில் வாதிட தலைமை வழக்கறிஞரையோ அல்லது உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஒருவரையோ அனுப்பியிருக்க வேண்டும். அவ்வாறு அனுப்பி இருந்தால் நீதிமன்றம் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு விடை அளித்திருக்கலாம்.
தனியார் பள்ளிகள், தற்போது உயர்நீதிமன்றம் அளித்துள்ள இத்தீர்ப்பை பயன்படுத்தி கொண்டு, இனிவரும் காலங்களில் கல்விபெறும் உரிமைச் சட்டத்தை செயல்படுத்த மறுக்கும் வாய்ப்புள்ளது. இந்த ஆபத்தை தடுப்பதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதி அளித்த தீர்ப்பை மறுஆய்வு செய்ய கோரி தமிழக அரசு மனு தாக்கல் செய்ய வேண்டும்.
அந்த மனுவின் மீதான விசாரணையின் போது உயர்நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கு விடையளித்து, ஏழை குழந்தைகளின் கல்விபெறும் உரிமையை பாதுகாக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications