பாளை சிறையில் 2,000 திமுகவினரை அடைக்க ஏற்பாடு
நெல்லை: சிறை நிரப்பும் போராட்டத்தில் கைதாகும் சுமார் 2,000 திமுகவினரை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
திமுகவினர் மீது பொய் வழக்குகளை போட்டு கைது செய்யும் அதிமுக அரசைக் கண்டித்தும், காவல் துறையின் நடவடிக்கையை கண்டித்தும் தமிழகம் முழுவதும் இன்று சிறை நிரப்பும் போராட்டம் நடக்கிறது.
இதையடுத்து திமுகவினரை கைது செய்து சிறையில் அடைக்க காவல்துறையினரும், சிறை துறையினரும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களைச் சேர்ந்த தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தற்போது இங்கு 3 மாவட்டங்களைச் சேர்ந்த 1,375 கைதிகள் உள்ளனர்.
இது தவிர 10 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்கும் கைதிகளும், ஆயுள் தண்டனை கைதிகளும் இருக்கின்றனர். இன்று மறியலில் கைதாகும் திமுகவினரை வெளிச்சிறையில் அடைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர். பாளையங்கோட்டை சிறையில் கைதிகளை சோதனை செய்யவும், கண்காணிக்கவும் சிறப்பு கமாண்டோ படையினர் 60 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கியிருக்கும் இடத்திலும் திமுகவினரை அடைக்க ஏற்பாடு நடந்து வருகிறது. பாளையங்கோட்டை சிறையில் 2,000 பேர் வரை அடைப்பதற்கு ஏற்பாடு நடந்து வருவதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
மீண்டும் மீண்டும் அதே தவறு.. கோட்டை விடும் ஸ்டாலின், உதயநிதி.. குமுறும் திமுகவினர் -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்!












Click it and Unblock the Notifications