மருத்துவக் கல்லூரிக்கு முறைகேடாக அனுமதி: அன்புமணிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது கோர்ட்

2009-ம் ஆண்டு மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த அன்புமணி, மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தூர் மருத்துவ கல்லூரிக்கு அங்கீகாரம் கொடுக்க அடிப்படை தகுதிகள் ஏதும் இல்லாத நிலையிலும் தனது பதவியை பயன்படுத்தி அங்கீகாரம் கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அவர்மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கை பாட்டியாலா நீதிமன்றத்தில் சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. சி.பி.ஐ. அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும் என அன்புமணிக்கு இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பியும் அன்புமணி நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து இன்று ஆஜராக உத்தரவிட்டு சென்னையில் உள்ள அன்புமணி ராமதாஸ் வீட்டில் சி.பி.ஐ. சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
ஆனாலும் பெங்களூரில் மருத்துவ சிகிச்சை பெற்றுவருவதால் அன்புமணியால் ஆஜராகமுடியவில்லை என்று சிபிஐயிடம் அன்புமணி வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதை நிராகரித்த சிபிஐ நீதிமன்றத்தில் இத்தகவலைத் தெரிவித்தது. இதையடுத்துஅன்புமணியை 20-ந் தேதிக்குள் கைது செய்து ஆஜர்படுத்துமாறு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications