நடிகை ஊர்வசி போதைக்கு அடிமையாகிவிட்டார்: எர்ணாகுளம் நீதிமன்றத்தில் கணவர் பரபரப்பு புகார்

நடிகர் மனோஜ் கே. ஜெயனுக்கும் நடிகை ஊர்வசிக்கும் 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் குஞ்ஞாச்சா என்ற மகள் இருக்கிறார். அண்மையில் ஊர்வசியும் மனோஜ் கே. ஜெயனும் விவாகரத்து பெற்றுவிட்டனர். ஜெயனிடம் மகள் ஒப்படைக்கப்பட்டார்.
ஆனால் தம்மிடம் மகளை ஒப்படைக்கக் கோரி ஊர்வசி மீண்டும் எர்ணாகுளம் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் குறிப்பிட்ட நாட்களில் மகளை ஊர்வசியுடன் அனுப்ப உத்தரவிட்டது.
இதற்கு மனோஜ் கே. ஜெயன் தரப்பு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்த வழக்கில் மீண்டும் விசாரணை நடைபெற்றது. இதில் ஜூலை 6-ந் தேதி முதல் ஒருவார காலத்துக்கு மகளை ஊர்வசியுடன் அனுப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் வைத்துதான் ஊர்வசியிடம் குழந்தையை ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டது.
இதற்காக எர்ணாகுளம் நீதிமன்றத்துக்கு ஊர்வசி, மனோஜ் கே ஜெயன், அவர்களது மகள் ஆகியோர் நேற்று வந்திருந்தனர். ஆனால் ஊர்வசியுடன் மகள் செல்ல மறுத்துவிட்டார். மேலும் ஊர்வசி எப்போதும் போதையில் இருப்பதால் அவரை நம்பி மகளை ஒப்படைக்க முடியாது. இப்போதும் அவர் குடிபோதையில்தான் இருக்கிறார் என்று மனோஜ் கே ஜெயன், நீதிபதியிடம் புகார் தெரிவித்தார்.
இதற்கு ஊர்வசி தரப்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. ஊர்வசிக்கு உடல்நலக் குறைவுதான் ஏற்பட்டுள்ளதே தவிர அவர் போதை அடிமை அல்ல. இதற்கான மருத்துவ பரிசோதனைக்கு தயாராக இருக்கிறார். தேவைப்பட்டால் மருத்துவரின் அறிக்கையைத் தாக்கல் செய்கிறோம் என்று வாதிடப்பட்டது.
ஊர்வசியுடன் மகள் செல்ல மறுத்துவிட்டதால் மனோஜ் கே ஜெயனே அழைத்துச் சென்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications