மேற்கு வங்கத்தில் படுக்கையில் சிறுநீர் கழித்த மாணவியை அதை குடிக்க வைத்த ஹாஸ்டல் வார்டன்

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ஹாஸ்டல் படுக்கையில் சிறுநீர் கழித்ததால் 5ம் வகுப்பு மாணவியை அவரது சிறுநீரைக் குடிக்க வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் சாந்தி நிகேத்தனில் உள்ள விஸ்வபாரதி பல்கலைக்கழக்கத்துடன் சேர்ந்த பதா பவன் பள்ளி ஹாஸ்டலில் தங்கி 5ம் வகுப்பு படிப்பவர் புனிதா. கடந்த சனிக்கிழமை மாலை ஹாஸ்டல் வார்டன் உமா போட்டார் ரவுண்ட்ஸ் வந்துள்ளார். அப்போது புனிதாவின் படுக்கை ஈரமாக இருந்தது. அவர் படுக்கையில் சிறுநீர் கழித்துள்ளார். இதையறிந்த வார்டன் புனிதாவின் பெட்ஷீட்டில் உள்ள சிறுநீரை மாணவியின் வாயில் பிழிந்து அதை குடிக்க வைத்துள்ளார். புனிதா படுக்கையில் சிறுநீர் கழித்த சம்பவம் ஏற்கனவேவும் நடந்துள்ளது.

இது குறித்து மாணவி தனதகு பெற்றோருக்கு தகவல் கொடுத்தார். தகவல் கிடைத்தவுடன் அவரது பெற்றோரும், பொதுமக்களும் ஹாஸ்டலுக்கு திரண்டு வந்து வார்டன் உமாவை தாக்கினர். மேலும் உமா போட்டாருக்கு எதிராக போல்பூர் காவல் நிலையத்தில் மாணவியின் தாய் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் உமா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து விசாரிக்க 4 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு விசாரணை நடத்தி தனது அறிக்கையை பல்கலைக்கழக துணை வேந்தரிடம் அளி்ககும் என்று பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தை தேசிய குழந்தைகள் உரிமைக்கான பாதுகாப்பு ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்நிலையில் மாணவியை சிறுநீரைக் குடிக்க வைத்ததற்காக ஹாஸ்டல் வார்டன் உமாவும், அத்துமீறி ஹாஸ்டலுக்குள் நுழைந்ததற்காக மாணிவியின் பெற்றோரும் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+