அபு ஜிண்டால் என் மகன் தான்: தாய்
டெல்லி: மும்பை தாக்குதல்களுக்கு மூளையாக இருந்த அபு ஜிண்டால் தன்னுடைய மகன் செய்யது ஜபியுத்தீன் தான் என்று அவனது தாய் ரெஹானா பேகம் தெரிவித்துள்ளார். முன்னதாக அவர் ஜிண்டால் தனது மகனே இல்லை என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை தாக்குதல்களுக்கு மூளையாக இருந்த அபு ஜிண்டால் டெல்லி விமான நிலையத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டான். அவன் தனது மகன் செய்யது ஜபியுத்தீன் என்று அவனது தாய் ரெஹானா பேகம் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அவுரங்காபாத் ஆயுத வழக்கு, அகமதாபாத் ரயில் வெடிகுண்டு வழக்குகளில் தேடப்பட்டு வந்த நிலையில் கடந்த 2006ம் ஆண்டு மாயமான மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தைச் சேர்ந்த செய்யது ஜபியுத்தீன் தான் அபு ஜிண்டால் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
டெல்லியில் நீதிமன்றத்தில் அபு ஜிண்டாலை பார்த்த ஹெரானா போகம் அவனிடம் நீ என் ஜபி தானே என்று கேட்டார். மேலும் குடும்ப நபர்களின் பெயர்கள் மற்றும் குடும்ப விஷயங்கள் பற்றி ஜிண்டாலிடம் கேள்வி கேட்டார். அத்தனை கேள்விகளுக்கும் ஜிண்டால் சரியான பதில் அளித்ததையடுத்து அவன் தன்னுடைய மகன் ஜபியுத்தீன் தான் என்பதை அவர் உறுதி செய்தார். இந்த தகவலை ஜிண்டாலுக்காக ரெஹானா பேகம் ஏற்பாடு செய்துள்ள வழக்கறிஞர் எம்.எஸ். கான் தெரிவி்த்தார்.
முன்னதாக கடந்த ஜூன் மாதம் 21ம் தேதி ஜிண்டால் சவூதி அரேபியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டபோது பீடில் உள்ள ரெஹானாவின் வீட்டு முன்பு செய்தியாளர்கள் குவிந்துவிட்டனர். அவர்கள் ரெஹானாவிடம் மும்பை தாக்குதலில் ஜிண்டாலின் பங்கு பற்றி கேட்டனர்.
அப்போது அவர் கூறுகையில், கராச்சியில் இருந்து கொண்டு அஜமல் கசாப் மற்றும் பிற தீவிரவாதிகளை இயக்கியதாகக் கூறப்படும் ஜிண்டால் எங்களுக்கு எந்த பணமும் கொடுக்கவில்லை. என் மகன் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டான் என்பதை நான் நம்ப மாட்டேன். அதனால் அவன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். என் கணவர் ஜகியுத்தீன் அன்சாரி மற்றும் என்னிடம் இருந்து போலீசார் டிஎன்ஏ மாதிரிகளைப் பெறவில்லை. அவன் 2006ம் ஆண்டு மாயமான பிறகு அவனை எங்கு தேடுவது என்றே தெரியவில்லை.
இந்நிலையில் 6 ஆண்டுகள் கழித்து அவனுடைய போட்டோவைப் பார்த்தவுடன் அடையாளம் தெரியவில்லை. ஏனென்றால் போட்டோவில் அவன் வித்தியாசமாக இருந்தான் என்றார்.
ஜிண்டால் தனது மகனே இல்லை என்று ரெஹானா முன்பு கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications