குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

குற்றாலத்தில் இந்தாண்டு ஜூன் மாதம் சீசன் முழுவதும் ஏமாற்றி விட்ட நிலையில் ஜூலை மாத சீசனாவது கைகொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இருந்தது. இந்த நிலையில் ஜூலை மாத தொடக்கத்தில் மூன்று தினங்கள் தொடர்ந்து சாரல் மழை பெய்ததால் சற்று நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால் எதிர்பாராவிதமாக கடந்த ஐந்து தினஙகளாக சாரல் இல்லாததுடன் வெயிலும் அடித்தது. இதனால் ஜூலை மாத சீசனும் ஏமாற்றிவிடுமோ என்று அஞ்சிய நிலையில் நேற்று இரவு ஆறுதலாக குற்றாலம், ஐந்தருவி, தென்காசி பகுதியில் சுமார் 3 மணி நேரம் பலத்த சாரல் மழை பெய்தது.
இதன் காரணமாக இரவு முதல் குற்றாலம் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரி்த்துள்ளது. ஐந்தருவியில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டியது. பெண்கள் பிரிவில் உள்ள இரண்டு பிரிவுகளிலும் ஒன்றாக இணைந்து ஒரே மாதிரி பிரிவாக கொட்டியது. மெயினருவியில் ஆண்கள், பெண்கள் குளிக்கும் பகுதியில் தண்ணீர் நன்றாக விழுந்தது. இதேபோல் புலியருவி, பழைய குற்றாலம் அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரி்த்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் ஆனந்தமாக குளித்து வருகின்றனர். இதே நிலை நீடித்தால் குற்றால சீசன் மீண்டும் களை கட்டும் என்று சுற்றுலாப் பயணிகள் மற்றும் வியாபாரிகள் நம்புகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications