இலங்கை கடற்படை தாக்குதல்-அமைச்சர் ஜெயபாலை சந்திக்கும் ராமேஸ்வரம் மீன்வர்கள்
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படை தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபாலை இன்று சந்தித்து பேசுகின்றனர்.
ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் தங்கள் பிழைப்புக்காகக் மீன் பிடிக்க கடலுக்கு செல்கின்றனர். அப்போது அவர்கள் இந்திய எல்லையைத் தாண்டி வருவதாகவும், விடுதலைப்புலிகளுக்கு உதவி செய்வதாகவும், இலங்கை கடல் பகுதியில் மீன் பிடிப்பதாகக் கூறியும் அவர்கள் மீது இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்தியும், அவர்களது வலைகளை அறுத்தும், படகை உடைத்தும் அராஜகம் செய்து வருகின்றது.
இந்நிலையில் இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரியும், இறால் மீன் விலை வீழ்ச்சியைத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் ஜூலை 1 ம் தேதி முதல் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட கடலோரப் பகுதி மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 10 நாட்களாக நடைபெறும் இந்த போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் மாவட்ட கலெக்டர் முன்னிலையில் பல கட்டப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் இன்னும் உடன்பாடு எட்டவி்ல்லை.
இதனைத் தொடர்ந்து இப்பிரச்சனைக்குத் தீர்வு காணக் கோரி தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபாலை இன்று சந்திக்க மீனவர்கள் சங்கப் பிரதிநிதிகள் முடிவு செய்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications