4 ஆண்டுகளாக பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர் கைது
டெல்லி: டெல்லியில் கடந்த 4 ஆண்டுகளாக 14 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியரை, போலீசார் கைது செய்தனர்.
டெல்லியில் உள்ள ஹஸ் குஸி என்ற பகுதியை சேர்ந்தவர் ஷைலேந்திர சிங்(42). பள்ளி ஆசிரியரான இவர், தான் பணியாற்றி வந்த பள்ளியில் படித்த 14 வயது மாணவி ஒருவரை கடந்த 4 ஆண்டுகளாக பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
ஆனால் இது குறித்து வெளியே தெரிவித்தால், பலாத்காரத்தின் போது எடுக்கப்பட்ட போட்டோக்களை இணையதளத்தில் வெளியிடுவேன் என்று அந்த மாணவியை, ஆசிரியர் ஷைலேந்திர சிங் மிரட்டியுள்ளார்.
இதில் பயந்து போன மாணவி, ஆசிரியர் அழைத்த போதெல்லாம் அவரது ஆசைக்கு இணங்கி உள்ளார். இந்த நிலையில் வழக்கம் போல மாணவியுடன் உல்லாசமாக இருக்க, அவரது மொபைல்போனுக்கு ஆசிரியர் அழைத்துள்ளார். ஆனால் போனில் பதிலளித்த பள்ளி மாணவியின் சகோதரிக்கு, ஆசிரியரின் காம லீலைகள் குறித்து தெரிய வந்துள்ளது.
இது குறித்து பாதிக்கப்பட்ட பள்ளி மாணவியின் சகோதரி, பெற்றோரிடம் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், மாணவியின் வாழ்க்கையை கெடுத்த ஷைலேந்திர சிங்கை கைது செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
இது குறித்து பாதிக்கப்பட்ட பள்ளி மாணவி கூறியதாவது,
கடந்த 4 ஆண்டுகளில் ஷைலேந்திர சிங், என்னை பல ஹோட்டல்களுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து வெளியே தெரிவித்தால், பலாத்காரத்தின் போது எடுக்கப்பட்ட போட்டோக்களை இணையதளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டினார் என்றார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications