அட, நம்ம தா.பாண்டியன் ஊரில் தான் இருக்கிறார்!
சென்னை: இலங்கை ராணுவத்துக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் 13ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் பல்லாயிரம் தமிழர்களை கொலை செய்த சிங்கள ராணுவத்துக்கு இந்திய அரசால் தமிழகத்தில் பயிற்சி அளிக்கும் முடிவை, ஒட்டு மொத்த தமிழ் மக்களும் எதிர்த்து நின்றதன் காரணமாக, தற்போது பெங்களூரில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்திய அரசின் முடிவு, தமிழ் மக்களுக்கு எதிராக தொடர்ந்து துரோகம் செய்வதையே காட்டுகிறது. மத்திய அரசின் இம்முடிவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
மத்திய அரசின் தமிழர் விரோதப் போக்கைக் கண்டித்தும், இந்தியாவின் எந்த மூலையிலும் இலங்கை சிங்கள ராணுவத்துக்கு பயிற்சி அளிக்கக்கூடாது என வலியுறுத்தியும் வரும் 13-7-2012 வெள்ளிக்கிழமை அன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும், தமிழ் மக்களும் இதற்கு ஆதரவு தரவேண்டுகிறோம் என்று கூறியுள்ளார்.
அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு மாநிலப் பிரச்சனைகளுக்காக அரசை எதிர்த்து பெரிய அளவில் தா.பா. இதுவரை பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
