எனது கணவரை அவரது அண்ணியிடமிருந்து மீட்டுத் தாருங்கள்... பெண் குமுறல்!

Subscribe to Oneindia Tamil

அரக்கோணம்: எனது கணவருக்கு அவரது அண்ணியுடன் கள்ளத் தொடர்பு உள்ளது. இதைத் தட்டிக் கேட்டபோது என்னை, எனது கணவர், அவரது அண்ணன் மற்றும் அண்ணி ஆகியோர் அடித்துத் துரத்தி விட்டனர். எனது கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸில் புகார் கொடுத்துள்ளார் அரக்கோணத்தைச் சேர்ந்த ஒரு பெண்.

அவரது பெயர் ஷாலினி. வயது 22. இவரது கணவர் பெயர் ராஜேஷ், வயது 29. தனது கணவர் மீது அரக்கோணம் மகளிர் காவல் நிலையத்தில் ஷாலினி கொடுத்துள்ள புகாரில்,

எனக்கு 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. எனது கணவர் ராஜேஷ் பி.இ. படித்திருப்பதாகவும், ரெயில்வே துறையில் நிரந்தர வேலை பார்ப்பதாகவும் கூறி ஏமாற்றி என்னை திருமணம் செய்த கொண்டார். ஆனால் அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

நாங்கள் வசிக்கும் வீட்டிலேயே ராஜேஷ் அண்ணன் ரஞ்சித்குமார் (30), அவரது மனைவி பொன்மொழி (27) ஆகியோருடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்தோம். எனது கணவர் ராஜேஷ், தனது அண்ணி பொன்மொழியுடன் கள்ளத் தொடர்பு வைத்துள்ளார். இருவரும் நெருக்கமாக இருந்ததை நான் நேரில் பார்த்து விட்டேன்.

இதுகுறித்து கேட்ட போது என்னை ஆபாச வார்த்தை கூறி ராஜேஷ், ரஞ்சித்குமார், பொன்மொழி ஆகியோர் அடித்து உதைத்து தாக்கினார்கள். உன் வீட்டிற்கு சென்று ரூ.2 லட்சம் ரூபாய் வாங்கி வந்தால்தான் இந்த வீட்டில் வாழ முடியும் என விரட்டி விட்டார்கள்.

நான் கடந்த 5 மாதங்களாக சென்னை பல்லாவரத்தில் உள்ள எனது தாய் வீட்டில் வசித்து வருகிறேன். எனது கணவருக்கு திருமணத்தின் போது 5 பவுன் பிரேஸ்லெட் செய்து போட்டார்கள். மேலும் எனது வீட்டில் மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுத்தார்கள். எனக்கு 25 பவுன் நகையும் சீர்வரிசையும் கொடுத்தனர்.

மேலும் எனது கணவர் பேரிலும், எனதுபோரிலும் ரூ.10 லட்சம் மதிப்புள்ள வீட்டு மனையும் எனது குடும்பத்தார் வாங்கி கொடுத்தனர். இவ்வளவு வசதியாக செய்து கொடுத்தும் நான் நிம்மதியாக வாழ முடியவில்லை. தற்போது நான் எனது கணவரால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன்.

எங்களுக்கு 6 மாத பெண் குழந்தை உள்ளது. எனது கணவரின் வரதட்சணை கொடுமை மற்றும் ஒழுங்கீனமான செயல் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார் அப்பெண்.

இதையடுத்து உடனடியாக மூன்று பேர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீஸார், ராஜேஷை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் வேலூர் சிறையில் அடைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+