இன்று ஆசிரியர் தகுதித் தேர்வு: 6.5 லட்சம் பேர் எழுதுகிறார்கள்- பள்ளிகளுக்கு விடுமுறை
சென்னை: பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு இன்று நடைபெறுகிறது. இதையொட்டி புதுவை மற்றும் தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி சட்டத்தின்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே தனியார் பள்ளிகள் உள்பட எந்த பள்ளியிலும் ஆசிரியராகப் பணிபுரிய முடியும். இதையடுத்து தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு இன்று நடைபெறுகிறது.
தமிழகத்தில் 1,027 மையங்களில் நடக்கும் தகுதித் தேர்வை 6.56 லட்சம் பேர் எழுதுகின்றனர். இன்று காலை 10.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இடைநிலை ஆசிரியர்களுக்கும், பிற்பகல் 2.30 மணி முதல் 4 மணி வரை பட்டதாரி ஆசிரியர்களுக்கும் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வையொட்டி தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு எழுதுபவர்கள் தேர்வு தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக மையங்களுக்கு வர வேண்டும். செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை தேர்வு மையத்திற்குள் கொண்டு வரக்கூடாது.
தமிழகத்தில் 23.08.2010 மற்றும் அதற்கு பின்பு ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்களும் இந்த தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications