டான்ஸர்களின் காலைப் பார்த்து வெட்கப்பட்ட லால் பகதூர் சாஸ்திரி!

பழம்பெரும் பத்திரிக்கையாளர் குல்தீப் நய்யார், எழுதியுள்ள பியான்ட் தி லைன்ஸ் என்ற சுயசரிதையில் மெளன்ட்பேட்டன் முதல் மன்மோகன் சிங் வரை பல தலைவர்கள் குறித்த பல அரிய தகவல்களை தொகுத்துள்ளார்.அதில் சாஸ்திரி குறித்த ஒரு சுவாரஸ்யமான தகவலை அவர் கொடுத்துள்ளார். அதிலிருந்து சில பகுதிகள்...
நேருவைப் போலவே சாஸ்திரியும் அலகாபாத்தைச் சேர்ந்தவர்தான். மிகவும் கட்டுப்பெட்டியானவர், பாரம்பரியத்தைக் கடைப்பிடிப்பதில் மிகவும் கவனமாக இருப்பார். நேருவுடன் ஒப்பிடுகையில் மிகவும் வசதிக் குறைவானவர்தான் சாஸ்திரி. நேரு பணத்திலேயே பிறந்தவர், புரண்டு வளர்ந்தவர். ஆனால் சாஸ்திரி அதற்கு நேர் மாறானவர். சாதாரண நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். மிகவும் எளிமையானவர்.
சாஸ்திரி மறைந்த பின்னர் இந்திரா காந்தி கூட சொன்னார், நான் சாஸ்திரியின் வீட்டுக்கு் சென்று அவர் வாழ்ந்த எளிமையான வாழ்க்கையை வாழ ஆசைப்படுகிறேன் என்று.
சாஸ்திரிக்கு ஆங்கிலம் அவ்வளவாக வராது. இதனால் ஆங்கிலம் நன்கு பேசுபவர்களை அவருக்குப் பிடிக்கும். ஆங்கிலம் நன்கு பேசினால் அவர்கள் மேல்தட்டு மக்கள் என்று கூட அவர் நினைத்திருந்தார். ஒருமுறை பஞ்சாப் குறித்த குறிப்பு ஒன்றை அவர் ஆங்கிலத்தில் எழுதியிருந்தார். அதை என்னைக் கூப்பிட்டுப் படித்துப் பார்க்குமாறு கூறினார். நான் பஞ்சாபைச் சேர்ந்தவன் என்பதால் பார்க்கச் சொல்லியிருப்பார் என்று நினைத்தேன். ஆனால் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கிறதா, சரியாக எழுதியிருக்கிறேனா என்பதை செக் செய்து சொல்லுமாறு என்னிடம் அவர் கூறியபோது ஆச்சரியப்பட்டுப் போனேன்.
பிறகு அவரே சொன்னார், எனது செக்ரட்டரி எல்.பி. சிங்கும் கூட எனது எழுத்தைப் பாராட்டினார் என்று குழந்தை போல கூறியதைப் பார்த்து மேலும் வியந்தேன்.
சாஸ்திரிக்கு கூச்ச சுவாபம் அதிகம். அதேபோல மரபுகள், பாரம்பரியம், கலாச்சாரம் குறித்தும் அதிக நம்பிக்கை உண்டு. அப்போது விலாடிமிர் நோபகோவ் எழுதிய லோலிட்டா நூல் ஆபாசமாக இருப்பதாக கருத்து பரவியது. இதனால் புத்தகத்தை தடை செய்ய வேண்டும் என்று பலரும் அமைச்சராக இருந்த லால் பகதூர் சாஸ்திரிக்குக் கடிதம் எழுதினர். அவரும், புத்தகத்தை உடனே தடை செய்யலாம் என்று நேருவுக்குக் கடிதம் எழுதினார்.
ஆனால் புத்தகத்தைத் தடை செய்யத் தேவையில்லை என்று நேருவிடமிருந்து உடனே பதில் வந்தது - நேரு,தனக்கு வரும் கடிதங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் பதிலளித்து விடுவார்- சாஸ்திரிக்கு அவர் எழுதிய கடிதம் ஒரு பெரிய கட்டுரை போல இருந்தது. அதாவது விலாவாரியாக லோலிட்டா குறித்து விளக்கிக் கூறியிருந்தார் நேரு. கடைசியில் லோலிட்டா தடை செய்யப்படவில்லை.
ரஷ்யா சென்றிருந்த போது லெனின்கிராட் நகரில் ஒரு பாலே டான்ஸுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். சாஸ்திரிதான் சிறப்பு விருந்தினர், தனது மனைவியுடன் கலந்து கொண்டார். ஆனால் நிகழ்ச்சி ஆரம்பித்தது முதல் முடியும் வரை சாஸ்திரிக்கு இருப்புக் கொள்ளவில்லை. நெளிந்தபடியே இருந்தார்.
அருகில் இருந்த நான் கேட்டேன், ஏதாவது அசவுகரியமாக இருக்கிறதா என்று. அதற்கு அவர் சொன்னார், டான்ஸ் ஆடும் பெண்களின் கால்கள் எந்தவித உடையும் இல்லாமல் வெறுமனே இருக்கிறது. மேலும் எனது கண் முன்பாக வந்து ஆடுகிறார்கள். பார்க்கவே சங்கோஜமாக இருக்கிறது. அதிலும் அம்மாவை (மனைவியை) அருகில் வைத்துக் கொண்டு பார்க்க ரொம்ப தர்மசங்கடமாக இருக்கிறது என்றார்.
அதேபோல மும்பையில் ஒருமுறை கமல்அம்ரோஹி, படப்பிடிப்புத் தளத்தில் சாஸ்திரிக்கு ஒரு வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதில் அப்போது உச்சத்தில் இருந்த நடிகையான மீனா குமாரி கலந்து கொண்டிருந்தார். அவர்தான் சாஸ்திரிக்கு மாலை போட்டு வரவேற்று அழைத்துச் சென்றார். சாஸ்திரியைப் பாராட்டி சின்ன உரையும் நிகழ்த்தினார்.
அப்போது மீனா குமாரியையே குறுகுறுவென்று பார்த்த சாஸ்திரி, என்னைத் தனியாக அழைத்தார். ஆமாம், இப்போது பேசுகிறாரே அந்தப் பெண் யார் என்று கேட்டார். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. அவர்தான் மீனா குமாரி, இந்தியாவின் உச்ச நடிகை என்றேன். அப்படியா என்று கேட்டுக் கொண்டார் சாஸ்திரி.
பின்னர் சாஸ்திரி பேச எழுந்தார். அப்போது, எனக்கு மீனா குமாரியின் பெயரை இதுவரை தெரியாது. இப்போதுதான் எனது வாழ்க்கையிலேயே முதல் முறையா கேள்விப்படுகிறேன். அனைவரும் மன்னித்து விடுங்கள் என்று அவர் கூறியபோது அனைவரும் ஆச்சரியப்பட்டுப் போயினர்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications