கோபால் கிருஷ்ண காந்தியை துணை ஜனாதிபதி வேட்பாளராக்க விரும்பும் மமதா

துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் தற்போதைய துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரியையே நிறுத்துவது என்று காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. ஆனால் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள திரிணாமூல் காங்கிரஸ் ஹமீது அன்சாரியை ஆதரிக்க மறுத்துள்ளது. மேலும் மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபால் கிருஷ்ண காந்தியை வேட்பாளராக்குவதில் திரிணாமூல் காங்கிரஸ் குறியாக உள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சி திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜியை எப்படி சமாதானம் செய்வது என்று அறியாமல் திணறுகிறது.
வரும் சனிக்கிழமை டெல்லியில் நடக்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கூட்டத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் கலந்து கொள்ளும் மத்திய ரயில்வே அமைச்சர் முகுல் ராய் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக கோபால் கிருஷ்ண காந்தி பெயரை பரிந்துரைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளரான பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க மமதா மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு 2 நாட்களுக்கு முன்பு தனது ஆதரவு யாருக்கு என்பதை அறிவிப்பதாக மமதா தெரிவித்தார்.
-
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications