நாங்கள்ளாம் வர மாட்டோம், எங்க வக்கீலுங்கதான் வருவாங்க... மதுரை ஆதீனம்
மதுரை: கோர்ட்டுக்கெல்லாம் ஆதீனங்கள் வர மாட்டார்கள். எங்கள் மீதான வழக்கிலும் கூட எங்களது சார்பில் வக்கீல்கள்தான் ஆஜராவார்கள். நாங்கள் போக மாட்டோம் என்று கூறியுள்ளார் மதுரை ஆதீனம்.
கொடைக்கானல், திருவண்ணாமலை என ரவுண்டு அடித்துக் கொண்டிருந்த நித்தியானந்தா நேற்று ராத்திரி திடீரென மதுரைக்குத் திரும்பினார். மதுரை ஆதீனத்துடன் தீவிர ஆலோசனை நடத்திய பின்னர் இன்று முற்பகலில் மீண்டும் மலையேறி விட்டார்.
இடையில் நித்தியானந்தா ஊரில் இல்லாத நேரத்தில் செய்தியாளர்களைக் கூப்பிட்டு தெளிவாகப் பேசிய மதுரை ஆதீனம், அமெரிக்க கோர்ட்டில், நித்தியானந்தாவுக்குத் தண்டனை விதிக்கப்பட்டால் உடனே அவரது நியமனத்தை மறு ஆய்வு செய்வேன் என்று தடாலடியாக கூறியிருந்தார்.
இந்த நிலையில் இன்று நித்தியானந்தா வந்தவுடன் மதுரை ஆதீனத்தின் பேச்சில் 'டோன் சேஞ்ச்' காணப்பட்டது. கலிபோர்னியா தீர்ப்பு குறித்து மாலைமலருக்கு மதுரை ஆதீனம் அளித்த பேட்டியில்,
அமெரிக்கா கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு வருகிற 19-ந்தேதி வெளிவருகிறது. இந்த வழக்கு நித்தியானந்தாவுக்கு எதிரானது அல்ல. அமெரிக்காவில் உள்ள தியான பீடத்தின் 2 பக்தர்களுக்கு இடையே உள்ள வழக்கு. தியான பீடத்திற்கு எதிராக தீர்ப்பு வந்தால் அபராதம் கட்டும் சூழ்நிலை ஏற்படும். ரூ.8 கோடி வரை அபராத தொகை இருக்கும். இதனை கட்ட தயாராக இருப்பதாக நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.
மேலும் மதுரை மாவட்ட கோர்ட் அனுப்பியுள்ள சம்மனை பெற்றுள்ளோம். நித்தியானந்தாவும் பெற்றுள்ளார். பொதுவாக மதுரை ஆதீனங்கள் கோர்ட்டில் ஆஜரானதில்லை. எங்கள் தரப்பில் நியமிக்கப்பட்ட வக்கீல்கள் ஆஜராகி எங்கள் தரப்பு நியாயங்களை கோர்ட்டில் விளக்குவார்கள். அதன்படி வருகிற 24-ந்தேதி வக்கீல்கள் எங்களது சார்பில் ஆஜராவார்கள் என்றார் அமைதியாக.
அடிக்கடி மதுரை ஆதீனம் டோனை மாற்றிப் பேசுவது அவரது ஆதரவாளர்களையே பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications