For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராவணன் எதற்காக ஜெயலலிதாவை கொடநாட்டிற்கே சென்று சந்திக்க வேண்டும்? கருணாநிதி கேள்வி

By Siva
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: பல்வேறு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ராவணன் எதற்காக கொடநாட்டிற்கு சென்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார். அவர்கள் பேசியது தான் என்ன என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

ராவணன் கொடநாடு சென்றது உண்மை என்றால், முதல்வர் ஜெயலலிதாவுடன் என்ன பேசுவதற்காக ராவணன் வந்தார் என்றும், அந்த உண்மைகள் நாட்டிற்கு தெரிய வேண்டியது இல்லையா?

முதல்வர் நினைத்தால் சசிகலா மீதும், அவரது கணவர் நடராஜன், அவருக்கு வேண்டிய ராவணன், திவாகரன் போன்றவர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பார். ஆனால் பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட ராவணனை கொடநாட்டிற்கு அழைத்துப் பேசுகிறார் என்றால் யாரை ஏமாற்றும் செயல்?. நடராஜன் மீது புகார் என்றனர், பின்னர் திரும்ப பெறப்பட்டன என்றனர். அப்படியென்றால் பொய் புகார் கொடுத்தவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? இது தவிர, தான் வெளியே வந்ததும் தன்னை என்கவுன்டர் செய்ய முயற்சி நடப்பதாக குற்றம் சாட்டிய நடராஜன், தற்போது வாயே திறக்காததற்கு என்ன காரணம்? தினமும் ஏராளமான குற்றங்கள் நடந்தாலும், அதைப் பற்றி கவனிக்க முதல்வரோ, அமைச்சர்களோ தலைநகரத்தில் உள்ளனரா?

மேலும், முதல்வர் இத்தனை நாட்கள் கொடநாட்டில் தங்கவும், அவரைப் பார்க்க அதிகாரிகளும், அமைச்சர்களும் யாத்திரை செய்ய மக்கள் வரிப் பணம் தான் செலவு செய்யப்படுகிறது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
DMK chief Karunanidhi has asked as to why did Sasikala's relative Ravanan go to Kodanadu to meet CM Jayalalithaa and what did they discuss.
 
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X