மேற்கு வங்கத்தில் வகுப்பறையில் மாணவியின் ஆடையை அவிழ்த்து சோதனையிட்ட ஆசிரியை
பரசாத்: மேற்கு வங்கத்தில் பணம் திருடியதாகக் குற்றம்சாட்டப்பட்ட மாணவியை வகுப்பறையில் சக மாணவிகள் முன்பு ஆடையை அவிழ்த்து ஆசிரியை சோதனையிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பதா பவன் பள்ளியில் 5ம் வகுப்பு மாணவி படுக்கையில் சிறுநீர் கழித்ததற்காக அவரது சிறுநீரை அவரையே குடிக்க வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில் மேற்கு வங்கத்தில் மேலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் பர்கனாஸ் மாவட்டம், கோபால்நகரில் உள்ளது கிரிபாலா பாலிகா வித்யாலயா மகளிர் பள்ளி. அங்கு 8ம் வகுப்பு படிக்கும் மாணவி பாயல்(பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த வெள்ளிக்கிழமை அன்று பள்ளிக்கு சென்ற பாயல் சக மாணவியின் பணத்தை திருடியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து ஆசிரியை ரூபாலி சக மாணவிகள் முன்பு வகுப்பறையில் வைத்து பாயலின் ஆடையை அவிழ்த்து சோதனையிட்டார்.
இதனால் மனமுடைந்த பாயல் வீட்டுக்கு சென்றதும் வகுப்பறையில் நடந்தவற்றைத் தெரிவித்து அழுதுள்ளார். இதையடுத்து அவரது தந்தை பபித்ரா மோண்டல் ஆசிரியை ரூபாலி மீது போலீசில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழ்ககுப் பதிவு செய்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணம் கிடைத்ததா என்று கேட்டதற்கு விசாரணை நடந்து வருவதாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications