நேபாளத்தில் பயங்கர பஸ் விபத்து... இந்தியர்கள் உள்பட 36 யாத்ரீகர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நேபாளத்தில் நடந்த பஸ் விபத்தில் ஏராளமான இந்தியர்கள் உள்பட 36 யாத்ரீகர்கள் பலியானார்கள்.
தெற்கு நேபாளத்தில், இந்திய எல்லைக்கு அருகே இன்று இந்த விபத்து நடந்தது. கொல்லப்பட்ட பயணிகளில் பெரும்பாலானவர்கள் உ.பி. மாநிலம் மகாராஜ்கன்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 80 யாத்ரீகர்களுடன் இந்தப் பேருந்து போய்க் கொண்டிருந்தது. அப்போது சாலையிலிருந்து திடீரென சறுக்கி அருகில் இருந்த ஒரு கால்வாயில் கவிழ்ந்து விட்டது.
நவல்பரசாய் என்ற இத்தில் உள்ள கோவிலுக்கு இந்தப் பஸ் போய்க் கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி விட்டது. இறந்தவர்களின் அடையாளம் இன்னும் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications