மழையின்றி தத்தளிக்கும் களக்காடு- வானம் பார்த்து காத்திருக்கும் விவசாயிகள்

Subscribe to Oneindia Tamil

களக்காடு: களக்காடு பகுதியில் பருவமழை பொழியாததால் 4-வது மாதமாக வறட்சி நீடித்து வருகிறது.

களக்காடு சுற்றுவட்டாரத்தில் ஜூன் முதல் வாரத்தில் தொடங்க வேண்டிய சீசன் இந்த ஆண்டு மழை இல்லாததால் தொடங்கவில்லை. அவ்வப்போது சாரல் மழை பெய்தாலும் அது நீடிப்பதும் இல்லை. இதனால் களக்காடை சுற்றியுள்ள 60-க்கும் மேற்பட்ட குளங்கள் வறண்டு போயுள்ளன.

பச்சையாறு அணை நீரின்றி வறண்டுபோய் கிடக்கிறது. தொடரும் வறட்சியால் நிலத்தடி நீர் மட்டும் மிகவும் கீழே போய்விட்டது. இந்த அளவு வறட்சி நீடிப்பது இதுவே முதல் முறை என்று புலிகள் காப்பக வனத்துறையினர் தெரிவி்த்துள்ளனர்.

களக்காடு பகுதியில் மழை வருவது போல் மேக கூட்டங்கள் திரள்வதும், பின்னர் மழை பெய்யாமல் களைந்து செல்வதும் தொடர்கதையாகிவருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+