2வது விண்வெளிப் பயணத்தைத் தொடங்கினார் சுனிதா வில்லியம்ஸ்

Subscribe to Oneindia Tamil

Sunitha williams
வாஷிங்டன்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் 2வது முறையாக விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

கஜகஸ்தானில் உள்ள பைகோனூர் ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 8.10 மணிக்கு சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டார்.

ரஷ்யா மற்றும் ஜப்பானைச் சேர்ந்த 2 விண்வெளி வீரர்களும் சுனிதாவுடன் புறப்பட்டு சென்றனர். சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள 32 பேர் கொண்ட குழுவுடன் வரும் 17-ந் தேதி மூவரும் இணைந்து கொள்வர் என்று நாசா தெரிவித்துள்ளது.

விண்வெளியில் அதிக நாள் தங்கி ஆய்வு செய்த வீராங்கனை என்ற பெருமையை சுனிதா வில்லியம்ஸ் பெற்றிருக்கிறார். 2006-ம் ஆண்டு 195 நாட்கள் தங்கியிருந்தார்.

இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ். இவரின் விண்வெளிப்பயணத்திற்கு அணு விஞ்ஞானி அப்துல் கலாம், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+