கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு அடுத்த அடி- 4 எம்.எல்.ஏக்கள் கட்சி தாவ முடிவு
Subscribe to Oneindia Tamil
கொச்சி: கேரளாவில் "கொலவெறி" அரசியலில் சிக்கித் தவிக்கும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு மற்றொரு அடியாக 4 எம்.எல்.ஏக்கள் கட்சி தாவ முடிவு செய்துள்ளனர்.
கேரளாவில் மார்க்சிஸ் கட்சியில் அச்சுதானந்தன் - பிணராய் விஜயன் இடையேயான மோதல் தீர்க்க முடியாத பஞ்சாயத்தாக இருந்து வருகிறது. இதேபோல் கட்சிக்கு துரோகம் செய்தால் கொலை செய்யப்படுவர் என்ற நிலையையும் உருவாக்கி வைத்திருக்கின்றனர்.
இந்த சூழ்நிலையில் மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து 4 எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனநாயக முன்னணியில் இணைய முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஆளும் கட்சி எம்.எல்.ஏ. செல்வராஜ், 3 அல்லது 4 எம்.எல்.ஏக்கள் நிச்சயம் மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து விலக உள்ளனர் என்றார்.
இதையே சில நாட்களும்மு முன்பு அரசு கொறடா ஜார்ஜூம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications